
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு நாளை முதல் வரும் ஜனவரி 1- ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ், ஊரக உள்ளாட்சி தேர்தல், புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 2 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.