உன்னாவ் பாலியல் வழக்கில் பாஜக எம்.எல்.ஏக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு தன்னிடம் வேலை கேட்டு வந்த 17 வயது இளம் பெண்ணை பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரால் கடத்தி பலாத்காரம் செய்தார் என்று பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து விவகாரம் பெரிதாகவே, உச்சநீதி மன்றம் நேரடியாக தலையிட்டு இவ்வழக்கை சி.பி.ஐக்கு மாற்றம் செய்தது. அதன் பின்னர் வழக்கு டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
கிரிமினல் குற்றப்பிரிவு 120பி, 363, 366, 376 மற்றும் ’போக்சோ’ சட்டத்தின் இதர பிரிவுகளின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை மாஜிஸ்திரேட் தர்மேஷ் சர்மாவிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையாக வைத்து குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, தீர்ப்பு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
இன்றைய அமர்வில் விசாரித்த நீதிபதி குற்றவாளி குல்தீப் சிங் செங்காரை ஆயுள் வரை சிறையில் அடைக்குமாறும் 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.