விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிட்டிங் எம்எல்ஏ தனது சொந்த மாமா என்றும், அந்தக் கட்சியில் தான் விக்ரமன் ஒரு செய்தி தொடர்பாளராக வேலை பார்க்கிறார் என்றும் முன்பு ஒரு முறை பிக்பாஸில் அசீம் கூறியிருந்தார். தற்போது அந்த செய்தி வைரலான நிலையில் அந்த சம்பந்தப்பட்ட எம்எல்ஏவான ஆளூர் ஷாநவாஸ் அதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார். அதில் அவர் அசீம் சொல்வது போல நான் அவருக்கு தாய் மாமாவே கிடையாது, எனக்கு அக்காவே கிடையாது, எனக்கு ஒரு தங்கை தான். எனவே அசீமுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரல் ஆகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொண்டுள்ள ஒரு முக்கியமான போட்டியாளராக இருந்து வருபவர் நடிகர் அசீம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நாடகங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார், பின்னர் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில நாடகங்களிலும் நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவருக்கு பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அவர் ஆரம்ப முதலே சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்தார். குறிப்பாக விக்ரமனிடம் இவருக்கு ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது. ஒருமுறை விக்ரமன் பற்றி மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கூறும் பொழுது எனது தாயின், சொந்த தம்பி தான் தற்போது விடுதலை சிறுத்தைகளில் கட்சியில் இருக்கும் சிட்டிங் எம்எல்ஏ என்று கூறினார். அந்தக் கட்சியில் தான் விக்ரமன் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வருகிறார் என்றும் அசீம் பேசியிருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சிட்டிங் எம்எல்ஏக்களில் இஸ்லாமியர்களில் ஒரே ஒருவர்தான் இருக்கிறார். அவர்தான் ஆளூர் ஷாநவாஸ். இந்த நிலையில் அனைவரும் ஆளூர் ஷாநவாசும் அசீமும் மாமன் மருமகன் முறை என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், தற்போது ஆளூர் ஷாநவாஸ் அதற்கு ஒரு விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் எனக்கு அசீமை தூரத்து உறவினர் என்கிற முறையில் தான் தெரியும்.
விக்ரமன் எனது நண்பர் மற்றும் கட்சித் தோழர். அசீமின் ஊரும் எனது ஊரும் ஆளூர் என்பதால் அவரை ஊர்காரர் என்கிற முறையில் தான் தெரியும். ஆனால் அசீம் சொன்னது போல அவருடைய தாயின் தம்பி நான் இல்லை. மேலும் நான் அசீமின் தாய் மாமாவும் இல்லை அவர் எதற்காக அப்படி சொன்னார் என்றும் எனக்கு தெரியவில்லை என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோவை தேடி கண்டுபிடித்த நெட்டிசன்கள் தற்போது அசீமை கலாய்த்து வருகின்றனர். எதற்காக அசீம் இவ்வாறு பொய் சொன்னார் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..