துணிவு கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகருக்காக மிக பெரிய விஷயம் செய்திருக்கும் தல.! என்னனு தெரியுமா?

துணிவு படம் வெளியான போது கொண்டாட்டத்தின் உயிரிழந்த ரசிகர் அஜித் என்பவருக்காக தல அஜீத் செய்துள்ள விஷயம் குறித்து தற்போது ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் ஒரு பேட்டியில் கூறி இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழின் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித்துக்காக உயிரையே கொடுக்கும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி தீவிர ரசிகர்களில் ஒருவரான 21 வயதாகும் அஜீத் என்பவர் துணிவு படம் வெளியான போது வண்டியின் மீது நின்று ஆடிக்கொண்டிருந்த போது கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தல அஜித்தே பலமுறை முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள் பின்னர் தான் நடிகர்கள், படங்கள் எல்லாம் என்று எத்தனையோ முறை அறிவுறுத்தியும் ரசிகர்கள் நடிகர்கள் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக இவ்வாறு ஏதாவது அசம்பாவிதத்தில் ஈடுபட்டு தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்கின்றனர்.

துணிவு கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகருக்காக மிக பெரிய விஷயம் செய்திருக்கும் தல.! என்னனு தெரியுமா? 1
இப்படியான போக்கு மாற வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். நடிகர்கள் தங்கள் தொழிலுக்காக இவ்வாறு செய்து வருகின்றனர். அவர்களுக்காக ஸ்டண்ட் செய்வது, உயரமான கட்டவுட்களில் ஏறி பால் ஊற்றுவது போன்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று நடிகர்கள் எவ்வளவோ வலியுறுத்தியும் ரசிகர்கள் அதை கேட்பதாக இல்லை. தொடர்ந்து இதுபோன்று ஏதாவது ஒரு செயல்களில் ஈடுபட்டு தங்கள் உயிரே போகும் அளவிற்கு நடந்து கொள்கின்றனர் .அது போன்ற ஒரு சம்பவம் தான் கடந்த ஜனவரி 11ஆம் தேதி நடந்தது. துணிவு படம் வெளியானதால் ஆர்வக்கோளாறு காரணமாக அதை கொண்டாடுவதற்காக வண்டி ஒன்றை ஏற்பாடு செய்து அதன் மீது நடனமாடி கொண்டே வந்தனர் அஜித் ரசிகர்கள். அப்போது அஜித் என்ற பெயரை கொண்ட ரசிகர் மேலிருந்து கீழே விழுந்து முதுகு எலும்பில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் கேட்டு அவரது பெற்றோர்கள் துடிதுடித்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  "Real thala with real thalapathy" என்ற Caption ஓடு வைரலாகும் தல அஜித், முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்த புகைப்படம்!

துணிவு கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகருக்காக மிக பெரிய விஷயம் செய்திருக்கும் தல.! என்னனு தெரியுமா? 3

ரசிகர்கள் யாரும் இதுபோல செய்யாதீர்கள். நடிகர்கள் உங்களுக்காக வரமாட்டார்கள் என்று அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர். இந்த நிலையில் துணிவு படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்த சுப்ரீம் சுந்தர் இது குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது இந்த விஷயத்தை கேள்வி பட்டவுடன் அஜித் மிகவும் வருத்தப்பட்டார் என்றும், இதனால் துணிவு பட வெற்றி கொண்டாட்டங்களை முற்றிலுமாக அவர் தவிர்த்து இருக்கிறார் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த தகவல் வெளியானது முதல் ரசிகர்கள் நெகிழ்ச்சியில் இருக்கிறார்கள். தனது ரசிகர் இறப்பிற்காக தனது படத்தின் வெற்றியைக் கூட கொண்டாடாமல் தல தவிர்த்து விட்டார் என்று நெகிழ்ச்சியுடன் அவர்கள் கூறி வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment