Categories: சமூகம்

மாணவர்களின் போராட்டம் குறைந்தபட்ச வெற்றியை பதித்துள்ளது!

திருத்தப்பட்ட தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வருகிறது. முதலில் வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கியது போராட்டம். அங்கு மக்கள் காவல்துறை மற்றும் துணை இராணுவத்தால் எதிர்கொண்ட பிரச்சனைகளையும், துப்பாக்கி சூட்டில் போராட்டக்காரர்கள் மரணமுற்ற செய்தியும் மற்ற நகருக்கு பரவ ஆரம்பித்தது.

ஆனால், அதற்குள் டெல்லியில் போராட்டம் வெடித்தது. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக காவல்துறை தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை கொண்டு மாணவர்களை கலைக்கவே, விழித்துக்கொண்டது மற்ற மாநிலங்கள்.

மாணவர்களின் போராட்டம் குறைந்தபட்ச வெற்றியை பதித்துள்ளது! 1

மாணவர்கள் மீது கைவைத்ததும் நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பல்கலைக்கழகம், சென்னை அம்பேத்கர் பல்கலைக்கழகம் மற்றும் பல முன்னணி பல்கலைக்கழக மாணவர்களும், மாணவர்கள் அமைப்பினரும் போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டம் மெல்ல மெல்ல பெங்களூர், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, லக்னவ், மும்பை, நாக்பூர் போன்ற 12க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு பரவியது. இதில் பாஜக ஆளும் மாநிலங்களில் மாணவர்கள் பலத்த அடக்குமுறைகளை சந்தித்து வருகிறார்கள். லக்னவ், மங்களூர் போன்ற இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் துப்பாக்கி சூடு நடந்தது. அச்சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் மாணவர்கள் மட்டும் இன்றி பொதுமக்களும் போராட்டக் களத்தில் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் போராட்டம் பரவாமல் இருக்க, மொபைல் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சிறுபான்மையினருக்கு நம்பிக்கை:

இத்தகைய எதிர்ப்புகளை தாண்டியும் மாணவர்கள் போராட்டம், பெருமளவு வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இப்போராட்ட மூலமாக, அரசு நிறுவனத்தின் ஆதிக்கத்தால் முற்றுகையிடப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு இதுவரை யாரும் எதிர்பார்த்திடாத ஆதரவையும், வலிமையையும் வழங்கியுள்ளார்கள். இத்தனை நாட்களாய் நண்பர்களாக பழகியவர்கள், அந்நியப்படுத்துவதை இப்போராட்டம் மூலம் பலத்த எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தடுமாறிய மதச்சார்பின்மையை தாங்களாகவே மாணவர்கள் நிலைநிறுத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

வலிமைமிக்க குழு:

தற்போது படித்துக்கொண்டிருக்கும் அடுத்த தலைமுறையினரான நடுத்தர வர்க்கத்தினர், அரசியல் மயமாக்கப்படுகின்றனர். ஒரு நாட்டின் முக்கிய தலைவர் ஒவ்வொரு குடிமகனின் உணர்வுக்கும் முக்கியத்துவம் அளித்திருக்கவேண்டும். ஆனால் திருத்தப்பட்ட புதிய சட்டத்தில் மோடி அவ்வாறு செய்யவில்லை. இதனை எதிர்த்து குழும்பி இருக்கும் கூட்டம், மோடியை போற்றும் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது குறைவானதே! ஆனால் இக்குழு செல்வாக்கு மிகுந்ததாகவும், வலிமை மிக்கதாகவும் உருப்பெற்றுள்ளது. நாளைய தலைவர்கள், எதிர்கால எழுத்தாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் என வலிமைமிக்கவையாக இருக்கிறார்கள். நேற்று வரை இந்து ராஷ்டிராவிற்கு கட்டுமானத்தை மேற்கொண்டு வந்த அராசாங்கம், அத்தனைக்கும் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என நினைத்தை இக்குழு உடைத்திருக்கிறது.

பொறிகளை தகர்த்த போராட்டம்:

இந்த திருத்தப்பட்ட சட்டத்திற்கு எதிராக போராட்டம் கிளந்தெழுந்த போது, “போராட்டக்காரர்களை உடையை வைத்தே கண்டு பிடித்துவிடலாம்” என பிரதமர் மோடி கூறினார். இவ்வாறு சிறுபான்மை மக்களுக்கு வைக்கப்பட்ட பொறியையும் மாணவர்கள் தகர்த்துள்ளனர். வன்முறையாக ஆற்றியுள்ள போராட்டங்களை விட அமைதி வழியில் நடைபெறும் போராட்டம் மிக அதிக அளவில் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களுக்கு எதிராக காவல்துறையும், அரசும் அடக்குமுறைகளை ஏவும் போது தான் போராட்டங்கள் கலவரங்கள் உருமாறுகின்றன. இதனை பொருத்தி பார்க்கும் இந்திய சிறுபான்மையினர் எந்த மாதிரியான வாழ்க்கையை எதிர்பார்க்கிறார்கள் என்பது நமக்கு புரியும். மாணவர்களின் போராட்டத்தை வங்கதேசத்தினரின் போராட்டமாக திசை மற்ற வாய்ப்பிருக்கும் என்பதாலே மாணவர்கள் காந்தி மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் படங்களுடன் போராட்ட களத்திற்கு வந்துள்ளனர். இதன் மூலம் பெரும் ஆபத்தை அவர்கள் தவிர்த்து இருக்கிறார்கள்.

இதன் மூலமாகவே அரசாங்கத்தின் எதிர்வினை ஏன் இவ்வளவு தீவிரமாக இயங்குவது ஏன் என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். இத்தனை அடக்குமுறைகளையும் மீறி மிக பெரிய அளவிலான போராட்டம் நடப்பதற்கு காரணம் “இந்த கொடிய சட்டத்தை விட வேறு எதற்கும் பயம் இல்லாமல் போனது தான்”. அதேபோல், எந்த ஒரு அடக்குமுறையும் இல்லாத மாநிலங்களில், போராட்டங்களும், பேரணிகளும் மிக அமைதியான முறையில் நடந்து வருகின்றன. முன்பே சொன்னது போல, ஊரடங்கு உத்தரவு, அறிஞர்களை தடுப்பது போன்ற அடக்குமுறையை அரசு மேற்கொள்ளும் போது தான் கலவரங்கள் உருவாக்குகின்றன. இதற்கு பாஜக மற்றும் பாஜக அல்லாத அரசுகள் ஆளும் மாநிலங்களை ஒரு உதாரணமாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

அதிகபட்சம் தடை உருவாக்கம்:

நாட்டில் பல்வேறு அரசுகளுக்கு கீழ், பலவிதமான போராட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. அதேபோல, “ஒரே மொழி, ஒரே நாடு” காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குதல் போன்ற சமீபத்திய நடவடிக்கைகளுக்கு முணுமுணுப்புகளை மட்டுமே வெளியிட்டு வந்த சமூகம், பலவிதமான கட்டுக்கதைகளை உடைத்து முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் அடுத்த முறை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நீண்ட நாள் கனவுகளை செயல்படுத்த முனையும் போது, மிக கவனமாக எடுத்து செல்வார்கள். தற்போது திருத்தப்பட்டுள்ள சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற போவதில்லை என்றாலும், அதிகபட்சமாக அந்த பாதையில் தடைகளை உருவாக்கி வந்துள்ளோம்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்