பெரும்பான்மை மக்களின் ஆதரவு இருப்பதாக நினைத்த அதிமுக ஆட்சிக்கு எதிராக அதே மக்கள் போராடுவதாக திமுக விமர்சித்துள்ளது.
திருத்தப்பட்ட தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டம் வன்முறையாக மாறி இது 6 பேர் துப்பாக்கி சூட்டில் இறந்துள்ளனர்.

இந்த சட்டத்திற்கு மாநிலங்களவையில் ஆதரவு கொடுத்து வெற்றி பெற வைத்ததில், அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளை சார்ந்த 12எம்.பிக்களின் முக்கியமான காரணமா பார்க்கப்படுகிறது. இதில் அதிமுக, பாமக- திமுக இடையே பெரும் விவாதமாக மாறி இருக்கிறது.
இது தொடர்பாக, தனது நாளேடான முரசொலியில், “தமிழ்நாட்டில் ஆளும் எடுபிடிகளும், மகனுக்கு மந்திரி பதவி பெற வேண்டும், சிபிஐ வழக்குகளை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் செயல்படும் மருத்துவரின் பாமகவும், இந்த நெறியற்ற மசோதா நிறைவேற துணைபோய் உள்ளன.
மிருகப் பெரும்பான்மை கிடைத்ததால் தறிகெட்டு ஓடி ஜனநாயக நெறிமுறைகளை சின்னாபின்மாக்கும் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது பாஜக அரசு ; எந்த மக்கள் பெரும்பான்மயை பாஜகவுக்கு கொடுத்தார்களோ அந்த மக்களே இன்று வீதியில் இறங்கிப் போராடத் துவங்கி விட்டனர்” என கூறியுள்ளது.