ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோயம்புத்தூருக்கு சென்று இருக்கிறார். தனக்கு மகன் பிறந்து முதன்முறையாக அவரையும் அழைத்துக் கொண்டு விமானத்தில் சென்று இருக்கிறார். அந்த வீடியோஙை தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் சஞ்சீவ். சின்னத்திரையில் ராஜா ராணி என்ற தொடரின் மூலமாக நடிகர்களாக அறிமுகமானவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக். இவர்கள் இருவருக்குமே இது முதல் நாடகம். இதற்கு முன்பாக ஆல்யா மானசா மாநாட மயிலாட போன்ற சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

சஞ்சீவ் குளிர் 100 டிகிரி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் அவருக்கு திரைத்துறை பெரிதும் கை கொடுக்காததால், சின்னத்திரையில் நடிப்பதற்காக வந்தார். இருவரும் இணைந்து விஜய் டிவியில் ராஜா ராணியில் சிறப்பாக நடித்தனர். பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு ஆல்யாவின் குடும்பத்தில் சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே பெற்றோரின் எதிர்ப்பை மீறி சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார் ஆல்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். முதல் குழந்தை ஐலா, இரண்டாவது குழந்தை அர்ஷ். இவர்கள் செய்யும் குறும்புத் தனங்களை தனது youtube பக்கத்தில் அவ்வப்போது பதிவேற்றி வருகிறார் சஞ்சீவ். அப்படி தற்போது ஒரு வீடியோவை பதிவேற்றி இருக்கிறார்.

அதில் தனக்கு மகன் பிறந்து முதன்முறையாக அவரையும் அழைத்துக் கொண்டு விமானத்தில் சென்று இருக்கிறார்.அந்த அழகிய வீடியோவை அவர் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Sanjiv & Alya