பிரபல சின்னத்திரை நடிகை ஆலியா மானசா தனது மகள் ஐலாவின் பிறந்த நாளை மிகப்பிரமாண்டமாக கொண்டாடி இருக்கிறார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்கிற நிகழ்ச்சியின் மூலமாக நடன கலைஞராக அறிமுகமானவர் ஆலியா மானசா.

பின்னர் இவருக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு சின்னத்திரைக்குள் நுழைந்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ என்கிற தொடரில் செம்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் ஆலியா.
முதல் நாடகமே மிகப்பெரிய தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்தார். அந்த நாடகத்தில் அவருக்கு ஹீரோவாக நடித்த சஞ்சீவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆலியாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
மூத்த மகள் பெயர் ஐலா. இரண்டாவது மகன் பெயர் அர்ஷ். இருவரும் பார்ப்பதற்கு பொம்மை போல் இருப்பதால் இவர்கள் செய்யும் குறும்புத்தனங்கள் நிறைந்த வீடியோக்களுக்கும் பார்வையாளர்கள் அதிகம் இருக்கின்றனர்.
இணையத்தை கலக்கி வரும் க்யூட் ஜோடிகளாக இருக்கும் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதிகள் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். தங்களது பிள்ளைகள் செய்யும் சேட்டைகளை வீடியோக்களாக எடுத்து அடிக்கடி பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஐலாவுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவை ஆலியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிந்திருக்கிறார். ஐலாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.