ஸ்ரேயா அஞ்சானின் பிறந்தநாளுக்கு நடிகர் சித்து செய்துள்ள பார்ட்டி வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து இன்று ரியல் ஜோடியாக வலம் வருபவர்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா. இவர்கள் இருவரும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்கிற சீரியல் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திரையில் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக, நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து அதை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். மேலும் youtube பக்கத்திலும் தங்களது சேனலை தொடங்கி அதில் Vlogs வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

மக்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியாக இவர்கள் இருவரும் இருக்கின்றனர். சமீபத்தில் கூட தனது காதல் மனைவிக்கு மோரிஸ் கேரேஜ் ரக காரை பரிசளித்திருந்தார் சித்து. இந்த நிலையில் ஸ்ரேயாவுக்கு பிறந்தநாளை எளிமையாக கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோ வெளியாகி ஸ்ரேயாவுக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.! Watch the below video.!
Youtube video code embed credits: sidhu & shreya