சின்னத்திரை உலகில் பிரபல தம்பதிகளாக இருக்கும் சஞ்சீவ் மற்றும் ஆலியாவின் மகள் தற்போது கியூட்டாக தனது தாயுடன் இணைந்து நடனமாடி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை உலகை கலக்கி வரும் தம்பதிகள் தான் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதிகள். இவர்கள் இருவருமே விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான ராஜா ராணி என்கிற சீரியலின் மூலமாக சின்னத்திரைக்கு நடிகர்களாக அறிமுகமானவர்கள். இந்த நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே இருவருக்கும் காதல் ஏற்பட, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சஞ்சீவ் இஸ்லாமியர் என்பதால் ஆலியாவின் வீட்டில் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே பெற்றோரின் எதிர்ப்பை மீறி சஞ்சீவுடன் திருமணம் செய்து கொண்டார் ஆலியா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு பின்னர் மிக சந்தோசமான வாழ்க்கையை இந்த தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர். பலரும் கண் படும் அளவிற்கு இந்த தம்பதிகள் இருந்து வருகின்றனர். கணவனை மனைவி கண் போல் பார்த்துக் கொள்வதும், சஞ்சீவ் ஆலியாவை பார்த்துக் கொள்வதும் என பலரும் பொறாமைப்படும் அளவிற்கு இந்த தம்பதிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு ஐலா மற்றும் அரிஷ் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் இருவர் செய்யும் சேட்டைகளை வீடியோவாக எடுத்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் தற்போது ஆலியா ஒரு புது வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஆலியாவுடன் இணைந்து அவரது மகள் ஐலாவும் க்யூட்டாக நடனம் ஒன்றை ஆடுகிறார்.
தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் அந்த மியூசிக் க்கு ஏற்றவாறு கைகளை அசைத்தும் நடனமாடியும் ஐலா க்யூட்டாக ஆடியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: SanjievAlya