நீங்க காலேஜ் படிக்கும் போது லவ் பண்ண பையன் நான் தான்.! உண்மைகளை உடைத்த ஜீவானந்தம்.!

சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது அடுத்த பரபரப்பான கட்டங்கள் எழுந்திருக்கும் இன்று ஜீவானந்தம் தான் ஈஸ்வரியின் முன்னாள் காதலர் என்கிற உண்மை தற்போது ஈஸ்வரிக்கு தெரிய வந்திருக்கிறது. இதை ஜீவானந்தம் தன் வாயாலயே ஈஸ்வரியிடம் கூறுகிறார். அந்த ப்ரோமோவை தற்போது சன் டிவி வெளியிட்டு இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் யார்.? அவர் எதற்காக குணசேகரனின் அப்பத்தாவின் நாற்பது சதவீத பங்குகளை எடுத்துக் கொள்ள வேண்டும்? அவருக்கும் அப்பத்தாவுக்கும் என்ன தொடர்பு? என்கிற குழப்பங்கள் நீடிக்க வந்த நிலையில் தற்போது ஜீவானந்தத்தின் கதையை முடிப்பதற்காக குணசேகரன் ஒருபுறமும், அவர் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஜனனி மற்றும் சக்தி ஒரு புறமும் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர். ஜீவானந்தத்தை சட்டரீதியாக எதிர்கொள்வது குறித்து தற்போது வக்கீலுடன் ஆலோசனை செய்து வருகிறார் குணசேகரன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்க காலேஜ் படிக்கும் போது லவ் பண்ண பையன் நான் தான்.! உண்மைகளை உடைத்த ஜீவானந்தம்.! 1

விளம்பரம்

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் வக்கீல் மற்றும் ஆடிட்டருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார் குணசேகரன். அப்போது சட்ட ரீதியாக அப்பத்தாவை ஏமாற்றி தான் ஜீவானந்தம் சொத்துக்களை எழுதி வாங்கி இருக்கிறார் என்று ஒரு வழக்கு தொடுக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் குணசேகரனுக்கு சொந்தமான தொழிற்சாலையில் அவர்கள் நுழைய தடை ஆணை வாங்கவும் வக்கீல் ஆலோசனை கொடுக்கிறார். இது ஒரு புறம் ஓடிக்கொண்டிருக்க மற்றொரு புறம் ரேணுகா பிரபல நடனப்பள்ளியில் ஆசிரியராக சேர இருக்கிறார். இதற்கிடையில் நில விஷயமாக தனது தந்தையுடன் சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார் ஈஸ்வரி, அவர் தனது தந்தையுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு கார் அங்கு வந்து நிற்கிறது. அதிலிருந்து ஜீவானந்தம் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் இறங்குகின்றனர். 

தொடர்புடையவை  விக்ரமன் உடல்மொழியை அசிங்கமாக கேலி செய்த மகேஸ்வரி.! கொதித்தெழுந்த நெட்டிசன்கள்.!

நீங்க காலேஜ் படிக்கும் போது லவ் பண்ண பையன் நான் தான்.! உண்மைகளை உடைத்த ஜீவானந்தம்.! 3
இத்துடன் இந்த எபிசோடு நிறைவடைந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஜீவானந்தம் ஈஸ்வரியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் ஈஸ்வரியை கல்லூரி காலத்தில் காதலித்து வந்தது தான் என்கிற உண்மையை அவர் உடைக்கிறார். இதனால் ஈஸ்வரி மனமடைந்து அழுது கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: SUN TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment