ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமாகியவர் நடிகை ஆல்யா மானசா. இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது. முதல் தொடரிலேயே மிகப்பெரிய வரவேற்பினை பெற்றார் ஆல்யா. இவர் இதே தொடரில் நாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது இவர் இனியா தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடருக்கும் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும், யூடியூப் சேனல் வைத்து பல லட்ச ரசிகர்களை தனது பக்கம் வைத்து இருக்கிறார் ஆல்யா மற்றும் சஞ்சீவ். ஆல்யா சன்டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பொழுது அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது.
தற்போது அதேபோல் , கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. ரசிகர்கள் ஆல்யா மானசாவின் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி ஆகி உள்ளனர் . மேலும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.