அப்பா நான் கேக் வெட்டுறேன்..! தனது மகன் மகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய சஞ்சீவ் | Alya Manasa Sanjeev

வெளியிட்டது

சஞ்சீவின் பிறந்தநாளுக்காக ஆல்யா செய்துள்ள சர்பிரைஸ் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. விஜய் டிவியில் வெளியான ராஜா ராணி சீரியலில் செம்பா – கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர்கள்தான் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். வேலைக்கார பெண்ணாக வரும் செம்பாவை வீட்டின் உரிமையாளரான கார்த்திக் காதலித்து திருமணம் செய்து கொள்வது போன்றும், பின்னர் அவருக்கு அவரது வீட்டில் உள்ளவர்களே கொடுமை செய்வது போன்ற கதை. இந்த நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இருவரும் 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் ஆல்யாவின் குடும்பத்தினருக்கு துளியும் விருப்பமில்லை. அதனால் குடும்பத்தை மீறி சஞ்சீவை கரம்பிடித்தார் ஆல்யா. இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் ஆல்யா ராஜா ராணி பார்ட் 2வில் நடித்துக் கொண்டிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்பா நான் கேக் வெட்டுறேன்..! தனது மகன் மகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய சஞ்சீவ் | Alya Manasa Sanjeev 1

அப்போது இரண்டாவது முறையாக மீண்டும் அவர் கருவுற்றார். அதனால் சீரியலில் இருந்து திடீரென விலகினார் ஆல்யா. அவருக்கு கடந்த மார்ச் மாதம் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அர்ஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு வீடியோவில் தனது மகனை முதன்முறையாக காண்பித்தார் ஆல்யா. கொரோனா லாக்டவுன் சமயத்தில் இருவரும் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தனர்.இருவரும் இணைந்து டூர் செல்லும் வீடியோக்கள், Vlogs வீடியோக்கள், போன்ற பல வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். பார்ப்பதற்கு மிக க்யூட்டாக இருக்கும் அந்த வீடியோக்கள் மில்லியன் பார்வையாளர்களை பெறுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது ஆல்யா ஒரு வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் சஞ்சீவ் பிறந்த நாளைக்காக ஆல்யா சர்ப்ரைஸ் செய்துள்ளார். அதில் ஐலா குட்டி அப்பாவுக்கு ஹாப்பி பர்த்டே சொல்லி கேக் வெட்டுகிறார். cute ஆக உள்ள அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

Youtube Video Code Embed Credits: Sanjiv & Alya

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்