அம்மன் கண்களில் வழிந்த ரத்தம்..இது மகாசங்கமம் இல்லை..மட்டமான சங்கமம்..மரணமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு தொடர்கள்தான் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2. இந்த இரண்டு சீரியலுமே ஒரே இயக்குனரால் இயக்கப்படுகிறது. பிரவீன் என்ற இயக்குனர் இந்த இரண்டு சீரியல்களையும் இயக்கி வருகிறார். பிரைம் டைம் என்று சொல்லப்படும் இரவு 9 மணிக்கு பாரதி கண்ணம்மாவும் அடுத்த சீரியலாக 9.30 மணிக்கு ராஜா ராணி 2 ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த இரண்டு கதையை பொறுத்த வரையில் குடும்ப உறவுகளைப் பற்றி கூறக்கூடிய ஒரு கதையாகும். பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வர அவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள்? என்ற எதிர்பார்ப்புடன் கதை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராஜா ராணி 2 சீரியலை பொருத்தவரை தனது மருமகள் சந்தியா மீது எப்போதும் சந்தேகப்பட்டு கொண்டிருக்கும் சிவகாமி அவர் விரும்பிய ஐ.ஏ.எஸ் படிப்பிற்கு அனுமதி கொடுப்பாரா? இல்லையா? தாயின் சொல்லை மீறி சரவணன் தனது மனைவி சந்தியாவை ஐஏஎஸ் படிப்பிற்கு படிக்க வைப்பாரா? இல்லையா? என்பது பற்றி கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

தொடர்புடையவை  சொந்தமாக வீடு கட்டி கிரஹபிரவேசம் செய்த "எருமசாணி" விஜய்.! இதோ கிரஹபிரவேச வீடியோ.!

அம்மன் கண்களில் வழிந்த ரத்தம்..இது மகாசங்கமம் இல்லை..மட்டமான சங்கமம்..மரணமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் 1அம்மன் கண்களில் வழிந்த ரத்தம்..இது மகாசங்கமம் இல்லை..மட்டமான சங்கமம்..மரணமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் 3

விளம்பரம்

தற்போது இந்த இரண்டு கதைகளுமே மிகுந்த போர் அடிப்பதாகவும் கதை இல்லாமல் ஏதேதோ வைத்து கதையை ஓட்டிக் கொண்டிருப்பதால், இந்த இரண்டு சீரியல்களையும் நிறுத்திவிட்டு நல்ல கதை அம்சத்துடன் கூடிய சீரியலை ஒளிபரப்பு மாறும் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கமெண்ட்களில் இயக்குனரை திட்டி தீர்த்தும் வருகின்றனர். இந்த நிலையில் மக்களின் சோர்வை போக்குவதற்காக, இந்த இரண்டு சீரியல்களும் இணைத்து மகா சங்கமம் என்று கதையை நகர்த்தி வருகிறார் இயக்குனர். தற்போது இந்த மகா சங்கமத்தில், ஏற்கனவே ராஜா ராணி சீரியலில் ஒரு போலி சாமியாரின் கதையை இடைச் செருகலாக போட்டு ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் பாரதி கண்ணம்மா சீரியலில் உள்ள நடிகர்கள் ராஜா ராணி வீட்டிற்கு வருவது போன்றும், அங்கு அந்த சாமியாரின் பூஜையில் கலந்து கொள்வது போன்றும் காட்டப்படுகிறது. அப்போது சாமிக்கு ஆரத்தி காட்டும் பொழுது திரை போடப்படுகிறது.

அம்மன் கண்களில் வழிந்த ரத்தம்..இது மகாசங்கமம் இல்லை..மட்டமான சங்கமம்..மரணமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் 5அம்மன் கண்களில் வழிந்த ரத்தம்..இது மகாசங்கமம் இல்லை..மட்டமான சங்கமம்..மரணமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் 7 அம்மன் கண்களில் வழிந்த ரத்தம்..இது மகாசங்கமம் இல்லை..மட்டமான சங்கமம்..மரணமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் 9

விளம்பரம்

திரைக்குப் பின்னால் இருக்கும் சாமியின் கழுத்தில் இருந்த நகையை யாரோ திருடி விடுகின்றனர். இதை கண்டுபிடிப்பதற்காக அந்த போலி சாமியார் சாமி சிலைக்கு ஆரத்தி காட்டுமாறு சொல்ல கண்ணம்மா, சந்தியா என அனைவரும் ஆரத்தி காட்டுகின்றனர். பிறகு சிவகாமி ஆரத்தி காட்டும் பொழுது அம்மன் கண்களில் இருந்து ரத்தம் வருவது போன்ற காட்சிகள் இருந்தது. இந்த காட்சியைப் பார்த்த பல நெட்டிசன்களும் இந்த நாடகத்தை கழுவி ஊற்ற ஆரம்பித்துவிட்டனர். இந்த காலத்திலும் இதுபோன்ற மூடநம்பிக்கையில் மூழ்கி திளைத்துக் கொண்டிருக்கிறீர்களே? ஏற்கனவே இது போல் மூடநம்பிக்கைகளில் இருக்கும் மனிதர்களுக்கு இது ஊக்கத்தை அளிக்காதா என்றும்? கதையை நகர்த்த முடியவில்லை என்றால் பேசாமல் இந்த இரண்டு நாடகத்தையும் முடித்து விடுங்கள் என்று ரசிகர்கள் கமெண்ட்களில் திட்டி தீர்த்து வருகின்றனர். Watch the promo below..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

 

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment