சின்னத்திரை உலகில் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் ஆல்யா மனசா மற்றும் சஞ்சீவ் ஜோடிகள். இருவரும் ராஜா ராணி என்ற தொடரில் செம்பா – கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு ஆல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இருந்தபோதிலும் விடாப்பிடியாக ஆல்யாவை கரம் பிடித்தார் சஞ்சீவ். இருவரும் திருமணத்திற்கு பிறகு மிக சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். ஆல்யா முதன்முதலாக மாநாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தார். குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலமாக சஞ்சீவ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். பின்னர் இருவரும் இணைந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்னும் சீரியலில் அறிமுகமானார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஆல்யா சமீபத்தில் கர்ப்பமாக இருந்ததால் ராஜா ராணி சீசன் 2வில் இருந்து விலகினார். தற்போது வீட்டில் தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். விரைவில் தனது கணவருடன் இணைந்து சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் தொடரில் ஆல்யா நடிப்பார் என்று தெரிகிறது. சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர்களுக்கு ஐலா, அர்ஷ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். முதல் குழந்தை ஐலா பார்ப்பதற்கு பொம்மை போல் மிக அழகாக இருப்பார். இவர் செய்யும் சேட்டைகளை வீடியோக்களாக பதிவு செய்து அதை தனது youtube பக்கத்தில் வெளியிடுவது வழக்கமாக இருக்கிறது. அந்த வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்து விடுவதும் வழக்கமாக இருக்கிறது.
தற்போது சஞ்சீவ் ஆல்யா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஐலா மற்றும் அர்ஸ்க்கு பாஸ்போர்ட் எடுக்க சென்றுள்ளனர். இருவரையும் வெளிநாடு அனுப்பி வைத்து படிக்க வைக்க போவதாக சஞ்சீவ் கூறுகிறார். மேலும் மாலுக்கு செல்லும் ஐலா அங்கு உள்ள பொம்மைகளுடன் விளையாடுகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..
Youtube Video Code Embed Credits: Sanjiev & Alya