“இதுல தமிழர் கலாச்சாரமே இல்லையே…ஆனா படம் மட்டும்…விமர்சனத்தை துவங்கிய மாறன்”

தமிழ் திரை ரசிகர்களின் மிக பெரிய கனவு படமாக இப்பொது இருப்பது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், ஜெயகாந்தன் இளங்கோ குமரவேல் எழுத்தில், அமரர் கலக்கியின் நாவலை அடிப்படையாக கொண்டு மிக பெரிய பொருட்செலவில் இந்த படம் உருவாகியுள்ளது. மணிரத்னத்தின் “மெட்ராஸ் டாக்கிஸ்” மற்றும் “லைகா ப்ரோடுக்ஷன்ஸ்” சுபாஷ்கரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

"இதுல தமிழர் கலாச்சாரமே இல்லையே...ஆனா படம் மட்டும்...விமர்சனத்தை துவங்கிய மாறன்" 1

விளம்பரம்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஆதித்ய கரிகாலனாக “சீயான்” விக்ரம், அருள்மொழி வர்மனாக “ஜெயம்” ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டவனாக சரத்குமார், சின்ன பழுவேட்டவராக பார்த்திபன், ஆழ்வார்க்கடியானாக ஜெயராம் என பலர் நடித்துள்ள இந்த படத்தின் முதல் டீஸர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

"இதுல தமிழர் கலாச்சாரமே இல்லையே...ஆனா படம் மட்டும்...விமர்சனத்தை துவங்கிய மாறன்" 3

விளம்பரம்

குறிப்பாக செட் டிசைன், பின்னணி இசை, கிராபிக்ஸ் காட்சிகள், குந்தவை – நந்தினியின் சந்திப்பு என டீசேரிலேயே சின்ன படம் ஒன்றை காட்டியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். இந்த படம் ஏற்கனவே மணிரத்னம் விஜய் மற்றும் மகேஷ் பாபு இருவரையும் முன்னணியில் வைத்து எடுக்க திட்டமிட்டு பின்னர் கைவிட்டு போனது. இப்பொது வேறொரு நடிகர் பட்டாளத்தில் அதே போல பிரமாண்ட சிந்தனையுடன் படம் தயாராகியுள்ளது.

தொடர்புடையவை  "இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்"!! போன் எடுத்துட்டு கல்யாணத்திற்கு வராதீங்க!!கல்யாணத்திற்கு வரவங்களுக்கு கட்டுப்பாடு போட்டு திருமணம் செய்யும் நயன்தாரா விக்னேஷ் சிவன்!!

"இதுல தமிழர் கலாச்சாரமே இல்லையே...ஆனா படம் மட்டும்...விமர்சனத்தை துவங்கிய மாறன்" 5

விளம்பரம்

இந்த கதை 1950களிலேயே அமரர் கல்கி எழுதி வெளியாகியது. அப்போதே இதனை படமாக எடுக்க மிக பெரிய அளவில் முயற்சிகள் நடைபெற்றன. குறிப்பாக மக்கள் திலகம் எம்,ஜி.ஆர் எப்படியேனும் எடுத்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் முயற்சித்துள்ளார். இருப்பினும் அவருக்கு கைகூடாமல் பின்னர் நடிகர் கமல் முழு மூச்சில் இறங்கி அவரும் கைவிட்டார். இப்பொது படம்  உருவாகியுள்ளது.

அந்த படத்தின் டீஸர் வெளியிட்டு விழா சென்னையிலுள்ள தனியார் அரங்கத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், நடிகை த்ரிஷா இயக்குனர் மணிரத்னம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என பலரும் கலந்து கொண்டனர். அனைவரும் ஒரே சரியாக குர்தா மற்றும் வேஷ்டியை  அணியாமல் பேண்ட் அணிந்து வந்தனர். இதனை இப்பொது சர்ச்சை கருத்தாகி வருகிறார் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.

விளம்பரம்

"இதுல தமிழர் கலாச்சாரமே இல்லையே...ஆனா படம் மட்டும்...விமர்சனத்தை துவங்கிய மாறன்" 7

வெளிவரும் படங்கள் அனைத்திற்கும் எப்போதும் நெகட்டிவ் விமர்சங்கள் கொடுத்து ரசிகர்களிடம் பிரபலமானவர் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். இது வரையில் இவரை ஒரு படம் கவர்ந்தது என்று இவரை தொடர்ந்து கவனித்து வரும் ரசிகர்களுக்கு கூட தெரியாது. சினிமாவை தாண்டி இவர் பொதுவெளியில் நடக்கும் சினிமா விஷயங்களையும் விமர்சித்து வருகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "என் மகன் எனக்கு கொடுத்த மாமருந்து" உருக்கமாக பதிவிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்.!

"இதுல தமிழர் கலாச்சாரமே இல்லையே...ஆனா படம் மட்டும்...விமர்சனத்தை துவங்கிய மாறன்" 9

தன்னுடைய ட்விட்டர் பதிவில், தமிழ் கலாச்சார படம் ஆனால் வேஷ்டி அணிய கூடாத என கமெண்ட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் டீஸர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Video Courtesy – Lyca Productions

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment