ராஜாராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து விஜயுடன் அடுத்தடுத்து “தெறி, மெர்சல், பீகில்” என இயக்கிய அனைத்து படங்களும் வெற்றியே.
தெறி படத்தின் மூலம் 150 கோடி வசூலை எட்டிய அட்லீ அடுத்து வெளியான மெர்சல் படத்தில் 260 கோடியை தாண்டினார். அதை தொடர்ந்து வந்த பிகிலில் 320 கோடிக்கு மேல் வசூலை செய்து தமிழ் சினிமாவின் மிக பெரிய இயக்குனராக உருவெடுத்தார்.

இவரின் படங்கள் தொடர் வெற்றியை பெற்றாலும் இவரின் மீது ஒரு மிக பெரிய குற்றசாட்டு எப்போதும் இருந்து கொண்டே வருகிறது. ராஜா ராணி மௌன ராகம் சாயலிலும், தெறி சத்ரியன் சாயலிலும், மெர்சல் அபூர்வா சகோதர்கள் மற்றும் மூன்று முகம் செயலிலும், கடைசியாக வெளியான பிகில் படம் நேரடியாக ஷாருக் கானின் “சக் தே இந்தியா” படத்தை நிறைய இடங்களில் காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக பயங்கரமாக விமர்சிக்கப்பட்டார்.
பலர் இவர் மேல் குறை கூறினாலும், இவருடைய வளர்ச்சியை அது எந்த வகையிலும் தடுக்கவில்லை. தற்போது அட்லீ பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரையுலகில் அட்லீ அறிமுகமாகிறார். இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள ‘ஜவான்’ திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியது. இதில், ஷாருக்கான் தன் முகத்தை ஒரு துணியால் மறைத்துக் கொண்டு தோன்றுவார். இதனிடையே, இப்படத்தின் டீசர் ஷாம்ரேமி இயக்கத்தில் 1990-ஆம் ஆண்டு வெளியான ‘டார்க்மேன்’ படத்தை ஒத்திருப்பதாக நெட்டீசன்கள் சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.

இருப்பினும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு என்னவோ அதிகமாக தான் இருக்கிறது. தமிழ் திரையில் மின்னிய இயக்குனர் ஹிந்தியில் மெகாஸ்டார் ரௌவருடன் பட்ஷம் பண்ணுவதாலேயே தமிழகத்திலும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது, இப்பொது இந்த படம் குறித்த ஒரு புதிய தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஆம், ஹிந்தியில் இந்த படத்தில் ஒரு மிக முக்கிய சம்பவம் அட்லீ செய்யவிருக்கிறார்.

அட்லீக்கும் விஜய்க்கும் நல்ல நெருங்கிய நட்பு உருவாகியுள்ளது. இது வெற்றி கூட்டணி என்பதால் ரசிகர்களும் இவர்களுடைய இணையை மிகவும் விரும்புகிறார்கள். இந்நிலையில், தற்போது தளபதி விஜய் ஜவான் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம் சென்னையில் 25 நாட்கள் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. அதில் ஒரு நாள் விஜய் வந்து கெஸ்ட் ரோலில் நடித்து கொடுக்கிறாராம். இதற்காக விஜய் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அந்த செய்தி கோலிவுட்டில் தீயாய் பற்றி எரிகிறது.