Categories: சினிமா

கர்ப்பமாக இருப்பதை அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்தார் நடிகை அமலா பால்.!

வெளியிட்டது

நடிகை அமலாபால் தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து அறிவித்திருக்கிறார். அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அவர் மகிழ்ச்சியான இந்த செய்தியை அறிவித்திருக்கிறார். ரசிகர்கள் பலரும் அமலா பாலுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலா பால்.

கர்ப்பமாக இருப்பதை அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்தார் நடிகை அமலா பால்.! 1

தமிழில் வெளியான ‘சிந்து சமவெளி’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்திருக்கிறார். குறிப்பாக ‘மைனா’, ‘தலைவா’, ‘தெய்வத்திருமகள்’, ‘ராட்சசன்: போன்ற பல படங்களில் நடித்து அசத்தியிருந்தார். இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லை. இருந்த போதிலும் கிடைக்கும் வாய்ப்புகளிலும், விளம்பர படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.


அமலா பாலுக்கும் இயக்குனர் ஏ.எல் விஜய்க்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் விரைவில் அவரை விவாகரத்து செய்திருந்தார் அமலாபால். ஏ.எல் விஜய் பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் அமலாபால் இத்தனை நாட்களாக தனியாக வசித்து வந்தார்.

கடந்த அக்டோபர் மாதம் தனது பிறந்த நாளில் தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தி இருந்தார் அமலா பால். ஜகத் தேசாய் என்பவருடன் காதலில் விழுந்துள்ளதாக அவர் அறிவித்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள கொச்சியில் அமலாபால் ஜகத் திருமணம் நடைபெற்று இருந்தது.

இந்த திருமணத்தில் திரை பிரபலங்கள் யாரையும் அழைக்காமல் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் அமலா பால். பின்னர் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மட்டுமே அவ்வப்போது பகிர்ந்து வந்தார்.

இந்த நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்திருக்கிறார் அமலா பால். கடற்கரையில் எடுத்துக்கொண்ட கர்ப்பகால புகைப்படங்களை பகிர்ந்திருக்கும் அவர் 1+1 = 3 என்று பகிர்ந்து இருக்கிறார்.


அமலா பாலுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்