முன்னணி நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை வலம் வருபவர் சமந்தா. தமிழில் அதர்வாவுக்கு ஜோடியாக பானா காத்தாடி படத்தின் நடித்ததின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார். அன்று முதல் இன்று வரை பல இளைஞர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருக்கிறார் சமந்தா . தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நாயகியாக கொடிகட்டி பறந்து வருகிறார். தமிழ் தெலுங்கு என மாறி மாறி முன்னணி நாயகர்கள் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்த இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அந்தளவுக்கு தனது ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் சமந்தா. தமிழ் தெலுங்கு மட்டுமில்லாமல் தற்போது ஹிந்தியிலும் கால்தடம் பதித்து இருக்கிறார். சென்னையை சேர்ந்த நடிகை சமந்தா தற்போது பாலிவுட் வரை ஜொலித்து வருவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. தற்போது கதாநாயகியாக நடிப்பதை குறைத்துக்கொண்டு கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் லண்டன் சென்றுள்ள நடிகை சமந்தா அங்கு எடுத்த அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
