Categories: சினிமா

பாவனியுடன் விரைவில் திருமணம்.!! திடீரென அறிவித்த அமீர்..! மனுஷன் எவ்ளோ வேகமா இருக்கான்யா

வெளியிட்டது

பாவனியை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக twitter-ல் அமீர் அறிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்பொழுதும் ஒரு காதல் கதை ஓடிக்கொண்டே தான் இருக்கும். திருமணமாகாத இருவர்கள் பங்குபெறும் போது அங்கு 100 நாட்கள் இருப்பதால் காதல் ஏற்படுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் காதல் காட்சிகளை ஓட்டினால் 100 நாட்கள் தாக்கு பிடிக்கலாம் என்ற எண்ணத்திலும் சிலர் அந்த காட்சிகளை ஓட்டுவது வழக்கமாக உள்ளது. ஆனால் அமீர் மற்றும் பாவனி சற்று வித்தியாசமானவர்கள். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. பாவனி ஏற்கனவே திருமணம் ஆகி மூன்றே மாதங்களில் கணவரை இழந்தவர். வைல்டு கார்ட் என்ட்ரியாக வந்த அமீர், பாவனியை காதலிப்பதாக கூறினார். ஆனால் பாவனி இதனால் வரை மறுப்பு ஏதும் சொல்லாமலே இருந்து வந்தார்.

பாவனியுடன் விரைவில் திருமணம்.!! திடீரென அறிவித்த அமீர்..! மனுஷன் எவ்ளோ வேகமா இருக்கான்யா 1

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் முடிந்து இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சிகள் பங்கெடுத்து வந்தார்கள். இந்த நடன நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று கடந்த வாரம் நடைபெற்றது. இதில் அமீர் மற்றும் பாவனி முதலிடத்தை பிடித்தனர். ஆடவே தெரியாமல் இருந்த தன்னை ஒரு டான்ஸராக மாற்றியதற்கு என்னுடைய மாஸ்டருக்கு நன்றி என்று பாவனி நீண்ட instagram பதிவு ஒன்றை போட்டிருந்தார். அந்தப் பதிவின் முடிவில் நாம் இப்போது சேர்ந்து நம்முடைய வாழ்வை தொடங்குவோம், லவ் யூ அமீர் என்று தன்னுடைய காதலை ஏற்றுக் கொண்டிருந்தார். இதனால் அமீர் பாவனியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

தற்போது அமீர் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், செய்தித்தாளில் வந்தது போல போலியான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. ஏற்கனவே பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஒரு சுற்றின் போது இருவரும் திருமணம் செய்து கொண்டது போல காட்டப்பட்டது. தற்போது அவர்கள் உண்மையிலேயே திருமணம் செய்து கொண்டால் அமீர் பாவனி ஜோடியின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்று விடுவது உறுதி.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்