அடேய் வந்தியதேவா, உனக்கு அண்ணனா பொறந்துட்டு.. கார்த்தியை செல்லமாக கலாய்த்த சூர்யா

தமிழ் திரையுலகின் நடிப்பு குடும்பமாக விளங்கி வருபவர்கள் சூர்யா – கார்த்தி குடும்பம். இவரது தந்தை சிவக்குமார் பழம்பெரும் நடிகர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்தது. பின்னர் சூர்யா, கார்த்தி, ஜோதிகா என அனைவரும் திரைத்துறையில் கோலொச்சி வருகின்றனர். சூர்யா 1997 ஆம் ஆண்டு உருவான ‘நேருக்கு நேர்’ என்ற படத்தின் மூலமாகத்தான் திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் ‘நந்தா’. அதன் பின்னர் அவர் பிரண்ட்ஸ், மௌனம் பேசியதே, பிதாமகன், அயன், சிங்கம் ஏழாம் அறிவு, ஜெய் பீம், சூரரைப் போற்று எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.

அடேய் வந்தியதேவா, உனக்கு அண்ணனா பொறந்துட்டு.. கார்த்தியை செல்லமாக கலாய்த்த சூர்யா 1

விளம்பரம்

திரைத்துறை மட்டுமல்லாது அகரம் என்ற அறக்கட்டளையை தொடங்கி பல மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கிறார் நடிகர் சூர்யா. இதனை கொண்டாடும் விதமாக அவரது தம்பி கார்த்திக் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் தனது ஒவ்வொரு மைனஸையும் மிகப் பெரிய பிளஸ் ஆக மாற்றுவதற்காக தனது அண்ணன் சூர்யா இரவு பகலாக உழைத்தார். அவர் தனது சொந்த சாதனைகளை மிஞ்சுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். அவருடைய தாராளமான இதயத்தை இன்னும் பெரிதாக்கினார். ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைத்தார். அவர்தான் எனது சகோதரன் சூர்யா, 25 வருடம் சூர்யாயிஸம் என்று கார்த்திக் பதிவிட்டிருந்தார்.

தொடர்புடையவை  விமான நிலையத்தில் இருந்து பின் தொடர்ந்த ரசிகர்!வீட்டிற்குள் அழைத்து அறிவுரை சொன்ன ரஜினி!!

அடேய் வந்தியதேவா, உனக்கு அண்ணனா பொறந்துட்டு.. கார்த்தியை செல்லமாக கலாய்த்த சூர்யா 3

விளம்பரம்

இதை ரீட்வீட் செய்த சூர்யா வந்திய தேவா, அண்ணனா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே என்று செல்லமாக கலாய்த்து பதில் அளித்து இருக்கிறார். இவர்கள் இருவரின் இந்த பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒருவரை ஒருவர் கண்டு பொறாமை கிடையாது. மேலும் தனது தம்பி நடித்த விருமன் படத்தைக் கூட சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமே சமீபத்தில் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இன்று போல் என்றும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே இவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

அடேய் வந்தியதேவா, உனக்கு அண்ணனா பொறந்துட்டு.. கார்த்தியை செல்லமாக கலாய்த்த சூர்யா 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment