“அய்யயோ மாட்டிகிட்டோம்”!! யாரும் தெரியாமல் Candle light dinner சென்ற அமீர் பாவனி!! நண்பரிடம் மாட்டிக்கொண்டு பிறகு அசடு வழிந்த பாவனி!!

வெளியிட்டது

சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தவர் நடிகை பாவனி. சின்னத்திரைகளில் மிகவும் பிரபலமான இவர் சில படங்களில் நடிகையாகவும் நடித்துள்ளார். இதற்கிடையில் விஜய் டிவி ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்  கொண்டார் அதில் இவருடன் சேர்ந்து பங்கெடுத்த ஆமிர் என்பவர் வெளிப்படையாகவே இவரிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினர். இருப்பினும் நடிகை பாவனி இதற்கு மறுப்பு தெரிவித்தார்.

"அய்யயோ மாட்டிகிட்டோம்"!! யாரும் தெரியாமல் Candle light dinner சென்ற அமீர் பாவனி!! நண்பரிடம் மாட்டிக்கொண்டு பிறகு அசடு வழிந்த பாவனி!! 1

தனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் சிறுது நாட்களிலேயே இறந்து விட இவர் இப்பொது தனியாக தான் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் தான் ஆமிர் இவரிடம் தன்னுடைய காதலை தெரிவித்தார். அந்த பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து அதில் பாவனி 3வது  இடம் பிடித்து வெளியேறினார். பின்னர் ஆமீருடன் பாவனி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மற்றொரு நிகழ்ச்சியான BB ஜோடிகள் நிகழ்ச்சியில் நடன போட்டியாளராக பங்கெடுத்து உள்ளனர்.

இருவரும் சிறப்பாக நடனம் ஆடி நிகழ்ச்சியில் நல்ல விமர்சங்களை பெற்று வருகினறனர். அவ்வப்போது நடிகை பாவனி போட்டிக்காக எடுக்கும் பயிற்சியை விடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் வரும் வாரத்திற்கான போட்டியில் கயிறு கட்டி இருவரும் நடனம் ஆட உள்ள நிலையில், அந்த ஆட்டத்திற்கான ஒத்திகை போட்டோவை இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ‘அடுத்து என்னை கொல்ல திட்டம் தீட்டி உள்ளான்” என ஆமீரை குறிப்பிட்டு பதீவினை பகிர்ந்துள்ளார்.

ஆமிர் ஏற்கனவே நடனம் தெரிந்தவர் என்பதால் அவர்க்கு இது இயல்பாக உள்ளது. ஆனால் நடிகை பாவனி மற்றொருவர் சொல்லி கொடுத்து நடனம் ஆடுபவர் என்பதால் இந்த மாதிரியான கடினமான ஆட்டங்கள் அவருக்கு கஷ்டமாக தான் இருக்கிறது.

ஆனால் எப்படியேனும் போட்டியில் வென்றுவிட வேண்டும் என்பதால் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இவர்களது ஜோடிக்கும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உள்ளது. அரசல் புரசலாக சிலர் இவர்கள் காதலிக்குறார்கள்  என்றாலும் நடிகை பாவனி தொடர்ந்து அந்த கருத்தை மறுத்து வருகிறார். நான் இப்பொது வரையில் ஆமீருடன் நட்பான பழக்கத்திலேயே இருந்து வருகிறேன் என திட்டவட்டமாக கூறிவருகிறார்.

இந்த போட்டியில் ஒரு வாரத்தின் முடிவில் பாவனி, ” எனக்கும் அமீரை புடிக்கும், ஆனால் கொஞ்ச தடவை வேனும் என்று சொல்லி தன்னுடைய காதலை மறைமுகமாக தெரிவித்தார். அண்மையில் கூட ஒரு போட்டோஷூட் நடத்தி, அதற்கு “Feeling loved” என கேப்ஷன் இட்டு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இதனால் இவர்களுடைய காதல் உறுதியாகியுள்ளது என பலரும் பேசி வருகிறார்கள்.

இந்த சர்ச்சை பேச்சுகளுக்கெல்லாம் இப்பொது இன்னும் கொஞ்சம் ஊக்கம் கொடுக்க இருவரும் தனியாக “Candle Light” சென்றுள்ளனர். தனியார் நிறுவன விளம்பரத்திற்காக இருவரும் சென்றிருந்தாலும், தனியாக சுற்றவே இருவரும் இவ்வாறு சென்றுள்ளனர் எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

எப்படியும் பரபரப்பாக நடைபெற்று வரும் “BB jodigal” நிகழ்ச்சி முடிவதற்குள்ளாகவே இருவரும் போது வெளியில் தங்களுடைய உண்மையான நிலைப்பாடை அந்த விவகாரத்தில் தெரிவிப்பார்கள் என தெரிகிறது. கொஞ்சம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என நிகழ் போகிறது என.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்