கிரிக்கெட்டர் தோனிக்கு இந்தியாவில் மட்டுமில்லை உலகரங்கில் கிரிக்கெட் ரசிகர்களிடம் சொல்லித்தெரிய அவசியம் இல்லை. இந்திய அணியின் முன்னாள் கேப்டன், சிஸ்கே அணியின் கேப்டன் என தன்னுடைய 40 வயதிலும் கிரிக்கெட் விளையாடி வரும் அவர் பலருக்கும் ரோல் மாடல்.
இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா இந்த வருடம் எந்த ஒரு ஐபில் அணியாலும் எடுக்கப்படாமல், முதல் முறை ஐபிலில் விளையாடாமல் வெளியில் மறந்து போட்டியை ரசித்து வருகிறார். கிரிக்கெட்டை தாண்டி மிஸ்ரா சமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர்.
நேற்று நடந்த ஐபில் போட்டியில் சென்னை-டெல்லி அணியின் போட்டியின் போது, சென்னை அணியின் கேப்டன் டோனி விளையாட தயாராகி உகட்கர்ந்து இருக்கும் போது தன்னுடைய பேட்டை வாயில் வைத்து கடிக்கும் படி இருக்கும் புகைப்படம் வெளியாகியது.

பலரும் பசிக்கு டோனி தன விளையாடும் பேட்டை கடித்து திண்கிறார் என கலாய்த்த வண்ணம் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். அதற்கு டோனியை கேலி செய்துவர்களுக்கு அமித் மிஸ்ரா பதில் அளித்துள்ளார்.
டோனி எப்போதும் தன்னுடைய பேட்டை சுத்தமாக வைத்து கொள்ள விரும்புவார். அதன் ஒரு பங்காக தான் தன்னுடைய பேட்டில் உள்ள டேப்பை கடித்து துப்புகிறார். அது பெரும்பாலும் கிரிக்கெட் விளையாடுபவர்கள் செய்வதே ஆகும். உங்களால் டோனியின் உடைய பேட்டில் இருந்து ஒரு டேப்பை கூட உங்களால் பார்க்க இயலாது எனவும் கூறியுள்ளார்.
இதனை புரிந்து கொண்டு பேசுமாறு அமித் மிஸ்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடந்த நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்று இருந்தாலும் ஐபில் வரலாற்றில் இரண்டாவது முறையாக பிளே அப் சுற்றிற்கு தகுதி பெறாமல் வெளியேறுகிறது.
Video Courtesy – Thanthi tv