“PS-1 டீசருக்கு டாஃப் கொடுக்கும் விளம்பரம்…கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்”

வெளியிட்டது

தமிழ் திரை ரசிகர்களின் மிக பெரிய கனவு படமாக இப்பொது இருப்பது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், ஜெயகாந்தன் இளங்கோ குமரவேல் எழுத்தில், அமரர் கலக்கியின் நாவலை அடிப்படையாக கொண்டு மிக பெரிய பொருட்செலவில் இந்த படம் உருவாகியுள்ளது. மணிரத்னத்தின் “மெட்ராஸ் டாக்கிஸ்” மற்றும் “லைகா ப்ரோடுக்ஷன்ஸ்” சுபாஷ்கரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

"PS-1 டீசருக்கு டாஃப் கொடுக்கும் விளம்பரம்...கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்" 1

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஆதித்ய கரிகாலனாக “சீயான்” விக்ரம், அருள்மொழி வர்மனாக “ஜெயம்” ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டவனாக சரத்குமார், சின்ன பழுவேட்டவராக பார்த்திபன், ஆழ்வார்க்கடியானாக ஜெயராம் என பலர் நடித்துள்ள இந்த படத்தின் முதல் டீஸர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக செட் டிசைன், பின்னணி இசை, கிராபிக்ஸ் காட்சிகள், குந்தவை – நந்தினியின் சந்திப்பு என டீசேரிலேயே சின்ன படம் ஒன்றை காட்டியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். ஆனால் இருப்பினும் இருதரப்பு ரசிகர்கள் படத்தில் Graphics காட்சிகள் இன்னும் கொஞ்ச சிறப்பாக செய்திருக்கலாம் என தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். குறிப்பாக போர் காட்சிகள் சில பாகுபலி படத்துடன் ஒப்பிடும் படி ஆகியுள்ளது.

இந்நிலையில் தற்போது ரசிகர்கள் சில ஆண்டுகள் முன்பு வெளியான அம்மன் TRY TMT கம்பியின் விளம்பரம் ஒன்றை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அதில் ஒரு கம்பியாக மிக வலிமையான போர்வாள் ஒன்று தயாரிக்கப்பட்டதாகவும், அதிலிருந்து வந்த கம்பிகள் தான் அம்மன் கம்பிகள் என கூறுவது போல விளம்பர படம் எடுத்துள்ளார்கள்.

இந்த வீடியோவில் மிகவும் நேர்த்தியாக பெரிய பட்ஜெட் செலவுகள் செய்யாமல் அழகாக இவ்வாறு எடுத்துள்ளது, ரசிகர்கள் பலரும் பாராட்டிவருகிறார்கள். சமூகவலைதலைவாசிகள் இதனை ராஜமௌலி படத்துடனும், இப்பொது உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீஸர் உடன்  ஒப்பிட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Video Courtesy – Silhouette Media Works

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்