இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக வெளியாகி 500 கோடிக்கும் அதிகமான வசூலை வாரி குவித்து இருந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் தேதியை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மறைந்த பிரபல எழுத்தாளர் அமரர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது தான் பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி 500 கோடிக்கும் அதிகமான வசூலை வாரி குவித்து இருந்தது. இந்த படத்தின் படபிடிப்புக்கள் ஏற்கனவே முடிந்திருந்ததால் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் இன்று மாலை பொன்னியின் செல்வன் பாகம் 2 குறித்த தகவல் வெளியாக இருப்பதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது புதிய டீசர் ஒன்றை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருந்தது. இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், வந்திய தேவனாக கார்த்தியும், குந்தவையாக நடிகர் த்ரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யாராயும் நடித்திருந்தனர். மேலும் இவர்களுடன் சேர்ந்து சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயசித்ரா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சோழ மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றை புனையப்பட்ட நாவலாக இந்த கதை ஐந்து பாகங்களாக வெளிவந்திருந்தது. தமிழர்களின் வீரத்தையும் சோழ மன்னர்களையும் வாழ்க்கை வரலாறையும் பறைசாற்றும் விதமாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் படம் வெளியான போது உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் இந்த படத்தை குடும்பமாக சென்று பார்த்து மகிழ்ந்தனர்.

ஐந்து பாகங்களாக உருவாகியிருந்த நாவலை 3 மணி நேர படமாக எடுப்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. எனவே இந்த படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க படக் குழு திட்டமிட்டு இருந்தது. கொரோனா காலம் என்பதால் படப்பிடிப்புகள் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. இறுதியாக இரண்டு பாகங்களும் எடுத்து முடிக்கப்பட்டு செப்டம்பர் 30-ம் தேதி முதல் பாகம் வெளியான நிலையில் தற்போது ஏப்ரல் 28ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை ஒரு டீசரை வெளியிட்டு படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. நீங்களும் அந்த டீசரை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the video below.!
Youtube Video Code Embed Credits: Tips Tamil