முடிவுக்கு வந்தது ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ சீரியல்..! இணையத்தில் வெளியான கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படங்கள்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ சீரியல் தற்போது நிறைவடைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை அந்த நாடகத்தில் ஹீரோவாக நடிக்கும் அருண் பத்மநாபன் கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படங்களை பகிர்ந்து உறுதி செய்து இருக்கிறார். ஒளிபரப்பாக தொடங்கி 400 எபிசோடுகளை மட்டுமே நிறைவு செய்த நிலையில் சீரியல் திடீரென முடிவுக்கு வர இருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர்ந்தான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ குடும்பப் பின்னணியை கொண்ட காதல் கதையை மையமாகக் கொண்டு இந்த தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கண்மணி மனோகரன் அமுதா என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

முடிவுக்கு வந்தது 'அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்..! இணையத்தில் வெளியான கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படங்கள் 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரதிகண்ணம்மா’ தொடரில் கண்ணம்மாவின் தங்கையாக நடித்து பிரபலமானவர் கண்மணி. இவருக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ தொடரில் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நாடகம் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது பார்வையாளர்களின் ஆதரவை இழந்த காரணத்தினால் விரைவில் தொடருக்கு மூடு விழா நடத்த இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் ஏழு மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், பின்னாளில் ஆறு மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. ஆனால் 6:00 மணிக்கு ஒளிபரப்பாகும் மற்ற தொடர்களை காட்டிலும் இந்த தொடர் குறைவான பார்வையாளர்களைப் பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் கடைசி இடம் பிடித்து வருகிறது.

தொடர்புடையவை  இனிமே ரோஜா இல்ல சீதா.! சன் டிவியில் இருந்து விலகி வேறு சேனலுக்கு சென்ற ரோஜா..! ப்ரோமோ இதோ.!

முடிவுக்கு வந்தது 'அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்..! இணையத்தில் வெளியான கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இதனால் இந்த நாடகத்தை முடித்து அதற்கு பதிலாக புதிய நாடகமான ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியலை ஒளிபரப்ப தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த செய்தியை அறிந்த சீரியல் ரசிகர்கள் சீரியலை முடிக்க வேண்டாம் என்று இயக்குனருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். விரைவில் சீரியல் முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாடகத்தில் ஹீரோவாக நடிக்கும் அருண் பத்மநாபன் மற்றும் ஹீரோயினாக நடிக்கும் கண்மணியும் கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படங்களை பகிர்ந்து உறுதி செய்து இருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment