பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் அனன்யா ராவ் பகிர்ந்த உணர்ச்சி பூர்வமான புகைப்படங்கள்.!

வெளியிட்டது

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் அனன்யா ராவ் தன்னுடைய இரட்டை சகோதரியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து என்னுடைய இரண்டாம் பாதி என்று உணர்வு பூர்வமாக பதிவிட்டு இருக்கிறார். திரைத்துறையில் மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கி பிக் பாஸ் சீசன் 7ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் அனன்யா ராவ்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் அனன்யா ராவ் பகிர்ந்த உணர்ச்சி பூர்வமான புகைப்படங்கள்.! 1

விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு பிக் பாஸ் ஒரு திருப்புமுனையை கொடுத்தது. ஆனால் எதிர்பாராத விதமாக முதல் வாரத்திலேயே பிக் பாஸில் இருந்து எலிமினேட் ஆகி அதிர்ச்சி கொடுத்திருந்தார் அனன்யா. தொடர்ந்து இவருக்கு இரண்டாவது முறையாக பிக் பாஸில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே செல்லும் வாய்ப்பு கிடைத்தது.


உள்ளே சென்ற அவர் இரண்டு வாரங்கள் மட்டுமே விளையாட முடிந்தது. மிட் வீக் எலிமினேஷன் என்று சொல்லி அனன்யாவை மறுபடியும் வெளியேற்றி இருந்தனர் பிக் பாஸ் குழுவினர். இது அனன்யாவுக்கு மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. யாருடனும் சண்டை போடாமல் தனது கருத்துக்களை ஆணித்தரமாக பேசி வரும் அனன்யாவை எதற்காக வெளியேற்றினீர்கள்? என்று சொல்லி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இருப்பினும் போட்டியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் இதுபோல தீவிர நடவடிக்கையை பிக்பாஸ் எடுத்திருப்பதாக தெரிகிறது.


இந்த நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் தனது இரட்டை சகோதரியான அபூர்வா ராவை நேரில் சென்று சந்தித்திருக்கிறார் அனன்யா. அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதில் அப்படியே அனன்யா ரவை போலவே அவரது சகோதரி அபூர்வா ராவ் இருக்கிறார். அபூர்வாரவிற்கு திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கின்றனர்.


இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இதில் யார் அனன்யா? யார் அபூர்வா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தப் புகைப்படங்களை பகிர்ந்த அனன்யா, “என்னுடைய மற்றொரு பாதி இவள் தான், நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதே நலம்” என்று பதிவிட்டு இருக்கிறார். அவரின் இந்த பதிவிற்கு கீழே உங்களை எலிமினேட் செய்தது சற்றும் நியாயம் கிடையாது என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்