பிக் பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான கடைசி ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது விஷ்ணு – பூர்ணிமா ரிகர்சல் பார்த்து வைத்திருந்ததை மணி கெடுத்து விட்டதை கமல் கூறி சிரித்துக் கொண்டிருக்கிறார். அதை நினைத்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும், “இன்றைக்கு ஆண்டவர் வேற லெவல் ஃபார்மில் இருக்கிறார் போல” என்று கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 7ல் கடந்த வாரம் ‘டான்ஸ் மாரத்தான்’ என்கிற போட்டி நடந்தது. இதில் போட்டியாளர்கள் பலரும் திரைத் துறையில் இருக்கும் பிரபல நட்சத்திரங்கள் போல உடை அணிந்து கொண்டு அவர்களின் பாடலுக்கு நடனமாடி இருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின் முதல் டாஸ்காக நடந்த இதில் தினேஷ் ஒரு புள்ளியையும், நிக்சன் ஒரு புள்ளியையும், அர்ச்சனா ஒரு புள்ளியையும் பெற்றிருந்தனர். இதில் அர்ச்சனா டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் கலந்து கொள்ள முடியாது என்பதால் தனது புள்ளிகளை பூர்ணிமாவிற்கு கொடுத்திருந்தார் .இந்த டான்ஸ் மாரத்தானில் பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக தினேஷ், விசித்ரா, அர்ச்சனா, பூர்ணிமா, விஷ்ணு போன்றோர் சிறப்பாக நடனமாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் பூர்ணிமாவிற்கு ‘பருத்திவீரன்’ படத்தில் வரும் பாடல் ஒன்றுக்கு நடனமாட அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்காக அவர் விஷ்ணுவை அணுகி அந்த படத்தில் வருவது போல கைகளை உயர்த்திக்கொண்டு நிற்குமாறு ரிகர்சல் பார்த்திருந்தார்.

ஆனால் பாடல் ஒளிபரப்பான போது மணி திடீரென உள்ளே புகுந்து விஷ்ணுவின் இடத்தில் நின்று விட்டார். இதைப் பார்த்த விஷ்ணு சோகத்தில் கைதட்டி கொண்டிருந்தார். தற்போது இதை மேற்கோள் காட்டி பேசிய கமல், செம ஜாலியாக விஷ்ணுவை கலாய்த்து தள்ளி இருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television