வைல்ட் கார்டு என்ட்ரி மூலமாக மீண்டும் உள்ளே வந்த போட்டியாளர் இவர்தானா? தீயாக பரவும் தகவல்.!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது வைல்டு கார்டு போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர் குறித்து தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த வாரம் அரை இறுதிச்சுற்று நடைபெறும் நிலையில் அடுத்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரி எபிசோட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது. விரைவில் அந்த எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக அந்த எபிசோடில் வெற்றி பெற்றது யார் என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்திருக்கிறது. தமிழ் சின்னத்திரை உலகின் ரியாலிட்டி ஷோர்களின் டாப் ஹிட் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி.

வைல்ட் கார்டு என்ட்ரி மூலமாக மீண்டும் உள்ளே வந்த போட்டியாளர் இவர்தானா? தீயாக பரவும் தகவல்.! 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை முடித்து தற்போது நான்காவது சீசனையும் வெற்றிகரமாக முடிக்க இருக்கிறது. இது முடிந்த பின்பு பிக் பாஸ் சீசன் 7 தொடங்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது. ஆரம்பத்தில் பத்து பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்து பேராக சுருங்கி இருக்கிறது. விசித்ரா முதல் பைனலிஸ்ட்டாக தேர்வு ஆகி இருக்கும் நிலையில், சிருஷ்டி டாங்கே, சிவாங்கி, மைம் கோபி, கிரண் ஆகிய நான்கு பேருக்கு இடையில் தற்போது அரையிறுதி சுற்று நடைபெறுகிறது. இதிலிருந்து இரண்டு அல்லது மூன்று பேர் மட்டும் இறுதிச்சுற்று தேர்வாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆரம்பத்தில் கலந்து கொண்டு எலிமினேட் ஆன போட்டியாளர்களுக்காக வைல்ட் கார்டு போட்டியை குக் வித் கோமாளி நடத்தி இருக்கிறது.

தொடர்புடையவை  "அசைவம் சமைக்கும் ஐயர் ஆத்து பொண்ணு" நயன்தாராவின் 'அன்னபூரணி' ட்ரைலர் வெளியானது.!

வைல்ட் கார்டு என்ட்ரி மூலமாக மீண்டும் உள்ளே வந்த போட்டியாளர் இவர்தானா? தீயாக பரவும் தகவல்.! 3
அதில் ஆரம்பத்தில் இருந்து எலிமினேட்டான கிஷோர் ராஜ்குமார், வி.ஜே விஷால், ராஜ் ஐயப்பன், ஷெரின், மதுரை காளையன், ஆண்ட்ரியன், கஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இதில் ஆண்ட்ரியன் தற்போது வெற்றி பெற்று மீண்டும் உள்ளே வந்துள்ள தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆரம்பம் முதலே ஒரு ஸ்ட்ராங் போட்டியாளராக இருந்து வருபவர் ஆண்ட்ரியன். இவர் எலிமினேட் ஆனது குக் வைத்து கோமாளி ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பலரும் சிவாங்கியை காப்பாற்றுவதற்காக தான் ஆண்ட்ரியனை எலிமினேட் செய்ததாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் ஆண்ட்ரியனோ “அது தனக்கான நாள் இல்லை, வைல்ம் கார்டில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்” என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் தற்போது ஆண.ட்ரியன் வைல்ட் கார்டு போட்டியில் வென்று உள்ளே சென்றிருக்கும் செய்தி அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment