குக் வித் கோமாளி சீசன் 4-ன் ஆறாவது பைனலிஸ்ட் இவங்க தான்.! கண்கலங்கி அழுத போட்டியாளர்.!

வெளியிட்டது

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் ஆறாவது பைனலிஸ்ட்டாக தற்போது தேர்வாகியுள்ளவர் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் சின்னத்திரை உலகில் டாப் ஹிட் நிகழ்ச்சியாக வலம் வந்து கொண்டிருக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி தற்போது மூன்று சீசன்களை முடித்து நான்காவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கின்றது. தற்போது பல மாதங்கள் ஓடிவிட்ட நிலையில், விரைவில் இந்த சீசன் முடிந்து அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 7 தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மொத்தம் 12 போட்டியாளர்கள் குக்குகளாக கலந்து கொண்ட நிலையில் ஐந்து பேர் ஃபைனலிஸ்டாக தேர்ந்தெடுக்கப்பட, வைல்ட் கார்டு என்ட்ரி மூலமாக தற்போது மற்றும் ஒரு நபர் ஆறாவது ஃபைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அந்த மகிழ்ச்சியான தகவல் தற்போது இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

குக் வித் கோமாளி சீசன் 4-ன் ஆறாவது பைனலிஸ்ட் இவங்க தான்.! கண்கலங்கி அழுத போட்டியாளர்.! 1

விசித்ரா, சிருஷ்டி, சிவாங்கி, மைம் கோபி, கிரண் என மொத்தம் ஐந்து பேர் முதலிலேயே ஃபைனலிஸ்டாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் எலிமினேட் ஆகி சென்ற ஏழு போட்டியாளர்கள் மீண்டும் வைல்ட் கார்டு போட்டிக்காக உள்ளே வந்தனர். மதுரை காளையன், ராஜ் ஐயப்பன், ஷெரின், வி.ஜே விஷால், கஜேஷ், ஆண்ட்ரியன் கிஷோர் ராஜ்குமார் என எலிமினேட் ஆகி வெளியே சென்ற ஏழு குக்குகள் தற்போது வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளர்களாக உள்ளே வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் வேற லெவலில் குக் செய்து தற்போது நடுவர்களை அசத்தியிருந்தனர். இதில் ஷெரின் ஆண்ட்ரியன் மற்றும் ராஜ் ஐயப்பன் ஆகிய மூவரும் மிக நன்றாக சமைத்து இரண்டாவது சுற்றுக்கு தகுதியாகி இருந்தனர். இரண்டாவது சுற்றிலும் மூன்று பேரும் தங்களது சிறந்த குக்கிங்கை கொடுத்திருந்தனர். இதனால் நடுவர்கள் யாரை பைனலிஸ்ட்டாக தேர்வு செய்வது என்கிற குழப்பத்தில் இருந்தனர்.

 

பின்னர் இறுதியாக ஆண்ட்ரியனை ஆறாவது ஃபைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுத்திருந்தனர். அறிவிக்கப்பட்ட உடனேயே ஆன்ட்ரியன் கண்கலங்கி அழுதார். மெயின் குக்கிங்கில் தான் எதிர்பார்த்தபடி உணவு வரவில்லை என்றதும் தான் மிகவும் உடைந்து போய்விட்டதாகவும், ஆனால் தன்னை குரேஷி, சுனிதா போன்றவர்கள் ஊக்குவித்து தான் இப்போது இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று கூறி மகிழ்ச்சியுடன் பேசி இருந்தார். மேலும் தகுதியான ஒரு நபருக்கு இந்த பரிசு சென்றிருப்பதாக வெங்கடேஷ் பட் பெருமையுடன் பேசியிருந்தார். ஆரம்பத்தில் இருந்து இந்திய உணவுகளை மிக சூப்பராக சமைத்து ஆன்ட்ரியன் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்,மிகவும் தகுதியான ஒரு நபருக்கு இந்த இடம் செய்து இருப்பதாக கூறி வெங்கடேஷ் பட் பேசினார். வெற்றி பெற்ற ஆண்டரியனுக்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.!

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்