அசல் கோலார் வரிகளில் “மார்க் ஆண்டனி” படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடல்.!

நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா ஆகியோர் இணைந்து நடித்து வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்திலிருந்து தற்போது முதல் சிங்கிள் பாடல் வெளியாகி இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இந்த பாடலின் ப்ரோமோ வெளியான நிலையில் தற்போது முழு லிரிக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். செல்லமே என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்க்கு நடிகராக அறிமுகமானவர் விஷால். இவர் தற்போது மார்க் ஆண்டனி என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் துப்பறிவாளன் பாகம் இரண்டு படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். அந்த படத்தை தானே இயக்கி வருகிறார். மேலும் அடுத்தபடியாக பெயரிடப்படாத தனது 34 ஆவது படத்திலும் விஷால் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆத்விக் ரவிச்சந்திரனுடன் இணைந்து அவர் நடித்துள்ள படம் தான் மார்க் ஆண்டனி. இந்த படத்தை மினி ஸ்டுடியோ சார்பில் எஸ் வினோத் தயாரித்திருக்கிறார். எஸ் ஜே சூர்யா, ரிது வர்மா, செல்வராகவன், சுனில், அபிநயா என பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அசல் கோலார் வரிகளில் "மார்க் ஆண்டனி" படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடல்.! 1

விளம்பரம்

மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க விஜய் வேலு குட்டி படத்தொகுப்பு பணிகளையும் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த செப்டம்பர் 2021 ஆம் தேதியே ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் சில காரணங்களால் படப்பிடிப்புகள் நடக்காமல் இருந்தது. பின்னர் மே ஐந்தாம் தேதி பூஜையுடன் இந்த படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டு இருக்கு தயாராகி இருக்கிறது. இந்த படம் வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். இந்த படத்தில் இருந்து எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் முதலாவதாக “அதிருதா மாமே” என்கிற பாடலின் ப்ரோமோ சில நாட்களுக்கு முன்பே வெளியிடப்பட்டிருந்தது. அசல் கோலார் இந்த பாடலின் வரிகளை எழுத டி ராஜேந்தர் மற்றும் அசல் கோலார் இருவரும் இணைந்து இந்த பாடலைப் பாடியிருக்கின்றனர்.

தொடர்புடையவை  வரலட்சுமியும் என் பொண்ணுதான்.! வரலட்சுமி பிறந்தநாளுக்காக செம்ம சர்ப்ரைஸ் செய்த ராதிகா.!

அசல் கோலார் வரிகளில் "மார்க் ஆண்டனி" படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடல்.! 3

விளம்பரம்

இந்தப் பாடலின் தெலுங்கு பதிப்பை விஷால் பாடியிருக்கிறார். இந்த நிலையில் படத்தின் முதல் ப்ரோமோ வெளியாகி சில நாட்களான நிலையில் முழு பாடலின் லிரிக்ஸ் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்..! நீங்களும் அந்த வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment