விஜய் டிவி பிரபலம் ரக்ஷன் உடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் இன்று பூஜையுடன் தொடங்கியது. அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்கிற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர், தற்போது தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது என்ன மாயம் படத்தில் இவர் நடித்திருந்த போதிலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான் முதலில் வெளியானது. முதல் படத்திலேயூ பல லட்சம் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தனுசுடன் இணைந்து தொடரி, விஜயுடன் இணைந்து பைரவா, சர்க்கார், சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரெமோ, சூர்யாவுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். கடைசியாக தெலுங்கில் தசரா என்கிற படத்தில் நானியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து தமிழில் இவர் நடித்த மாமன்னன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

தற்போது கைவசம் தெலுங்கில் போலோ சங்கர் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். தமிழில் சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் “கண்ணிவெடி’ என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பது இன்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.

இந்த புகைப்படங்களை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜே ரக்ஷன் இருவரும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கியதற்காக படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தங்களது நன்றியை தெரிவித்து இருக்கின்றனர். ரக்ஷன் தனது பதிவில், “இந்த அருமையான குழுவுடன் இணைந்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் உடன் நடிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் உடன் இணைவது தன்னுடைய கனவாக இருந்தது, இந்த அழகான பயணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

அவரின் இந்த பதிவுக்கு கீழே விஜய் டிவி பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அடுத்த படம் இதுதான், உங்களுடைய ஆதரவும் அன்பும் தேவை என்று பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த படத்தை எஸ் ஆர் பிரபு சார்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, கணேஷ் ராஜ் என்பவர் எழுதி இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Dream Warrior Pictures