Categories: சினிமா

எனக்கு ஊசி போட்டு கருணை கொ லை பண்ணிடுங்க.! கதறி அழுத அங்காடி தெரு பட நடிகை சிந்து.!

வெளியிட்டது

தன்னை விஷ ஊசி போட்டு கொன்றுவிடுமாறு அங்காடித்தெரு பட நடிகை தற்போது முதல்வருக்கு கோரிக்கை வைத்து கதறி அழுதுள்ள வீடியோ பார்ப்பவர்களின் நெஞ்சை கரைய வைத்திருக்கிறது. புற்றுநோயால் பல நாட்களாக அவதிப்பட்டு வரும் அவர் தற்போது இது போன்ற ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010 வெளியான அங்காடித் தெரு படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரமாக நடித்திருந்தவர் நடிகை சிந்து. ஆரம்பத்தில் விலைமாதுவாக இருக்கும் இவர் பின்னர் மனம் திருந்தி நடைபாதையில் வியாபாரம் நடத்தி வரும் குள்ளமான ஒரு மனிதரை திருமணம் செய்து கொண்டு அவருடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சிந்து. இந்த கதாபாத்திரத்திற்கு பின்னர் அவர் பெரிய அளவில் அறியப்பட்டார். சமீப காலமாக அவர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறார். அதற்கு முக்கிய காரணம் அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார் பலரும் அவருக்கு உதவி செய்து வரும் நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்த அவர் தன்னை விஷ ஊசி போட்டு கொன்று விடுமாறு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எனக்கு ஊசி போட்டு கருணை கொ லை பண்ணிடுங்க.! கதறி அழுத அங்காடி தெரு பட நடிகை சிந்து.! 1
சினிமாவிலும் சீரியலிலும் நடித்து வந்த சிந்து கொரோனா காலகட்டத்தில் உணவில்லாமல் தவித்தவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார். இவ்வாறாக சேவை மனப்பான்மை கொண்ட சிந்துவிற்கு தற்போது கேன்சர் பாதிக்கப்பட்டு அதனால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது அவர் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் 2020 ஆம் ஆண்டு முதல் தனக்கு கேன்சர் இருப்பதாக கண்டறியப்பட்டு மார்பகங்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. அன்று தொடங்கி இங்கிலீஷ் மருத்துவம் நாட்டு மருத்துவம் என்று எத்தனையோ வைத்தியம் பார்த்து வருகிறேன். ஆனால் இதிலிருந்து தன்னால் மீள முடியவில்லை. மருத்துவர்களை நான் குறை சொல்லவில்லை, எனக்கு நன்றாக சிகிச்சை அளித்தார்கள். ஆனால் என் உடல் மருத்துவத்திற்கு ஒத்துழைக்கவில்லை. மேலும் தஞ்சாவூர் அருகே ஒரு கிராமத்தில் தங்கி வைத்தியம் பார்த்து வந்தபோது மார்பகத்தில் இருந்த புண்கள் ஆறியது. ஆனால் அப்போது என் மருமகன் இறந்து விட்டதால் அந்த சிகிச்சை தொடர முடியாமல் சென்னைக்கு வந்து விட்டேன். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஓய்வெடுக்க சொன்னார்கள் ஆனால் நான் உழைத்தால் தான் என்னால் சாப்பிட முடியும் என்னால் எப்படி ஓய்வு எடுக்க முடியும்.

நான் இப்படி அவதிப்படுவதை பார்த்த நண்பர்கள் எனக்கு உதவி இருக்கிறார்கள். அவர்களால் தான் சாப்பிடுகிறேன் ஆனால் எவ்வளவு நாட்கள் எனக்கு உதவி செய்வார்கள்? அவர்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்று சொல்லி மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன். அப்போது கைகளில் வளையல் போட்டது ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜியால் கை வீங்கிவிட்டது. தற்போது எனது இடது கை சுத்தமாக செயல்படுவதில்லை. மரத்துப் போய்விட்டது. எனது மகளும் வேலையில்லாமல் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவளையும் நான் பார்த்துக் கொள்கிறேன். தினம் தினம் வலியால் துடிப்பதற்கு பதிலாக என்னை விஷ ஊசி போட்டு கொன்று விடுங்கள் என்று கேட்டு வருகிறேன். இந்த பேட்டியை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். எனக்கு சிகிச்சையும் என் மகளுக்கு ஒரு வேலையும் கிடைத்தால் நன்றாக இருக்கும். நான் யாருக்கும் எந்தத் துன்பம் செய்யவில்லை, ஆனால் ஏன் கடவுள் எனக்கு இப்படி ஒரு வலியை கொடுக்கிறார் என்று தெரியவில்லை என்று மிக உருக்கமாக பேசினார்.! அவரின் இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Video Below..!

 

YouTube Video Embed Code Credits: YellowBench Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்