உயிருக்கு போராடும் அங்காடி தெரு நடிகை சிந்து.! இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் எடுத்த வீடியோ.!

வெளியிட்டது

அங்காடித்தெரு படத்தில் நடித்து வந்த நடிகை சிந்து மார்பக புற்றுநோய் காரணமாக சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் காலமாகி இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக மருத்துவமனையில் உயிருக்கு போராடும் அவரது வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரின் மனதை கலங்கடித்து இருக்கிறது. 2010 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு என்கிற படத்தில் மூலமாக அறிமுகமானவர் நடிகை சிந்து. இந்தப் படத்திற்குப் பின்னர் சில சீரியல்களிலும் படங்களிலும் நடித்து வந்த அவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு புற்றுநோய் இருக்கும் செய்தி கண்டறியப்பட்டது. இதற்காக அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனால் எந்த சிகிச்சையும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உயிருக்கு போராடும் அங்காடி தெரு நடிகை சிந்து.! இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் எடுத்த வீடியோ.! 1

இந்த நிலையில் சென்னையில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவருக்கு புற்றுநோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானது. மேலும் இடது பக்க மார்பிலிருந்து வலது பக்க மார்புக்கும் புற்றுநோய் பரவியதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார் சிந்து. மேலும் தன்னை விஷ ஊசி போட்டு கொன்று விடுமாறும், தன்னால் இந்த வலியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் பேசியிருந்தார். மேலும் நடிகர் சங்கம் மற்றும் விஷால் போன்றவர்களிடமும் உதவியை எதிர்பார்த்து காத்திருந்தார். சில நடிகர்கள் சிந்துவிற்கு தொடர்ச்சியாக உதவி செய்த போதிலும் பணம் போதாக் குறையால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை சிந்து காலமாகிவிட்டதாக செய்திகள் வெளியானது. அவரது இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு சென்னை விருகம்பாக்கம் இடுகாட்டில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையிம் சில மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிந்துவின் கடைசி வீடியோ வெளியாகியிருக்கிறது. அதில் மூச்சு விட முடியாமலும், வலியாலும் உயிருக்கு போராடும் சிந்துவின் அந்த வீடியோ தற்போது பலரையும் கலங்கடித்துள்ளது. பலரும் சிந்துவின் இறப்புக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.! நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்