3 மணி நேரம் நீளம் ஏன்? உங்க லக்கி நம்பரா? கேள்விகளால் துளைத்து எடுத்த நெட்டிசன்கள்

கோப்ரா பாகம் இரண்டு வருமா? கோப்ரா படத்தை 3 மணி நேரம் எடுத்தது ஏன்? என்பது குறித்து ரசிகர்கள் கேட்ட அனைத்து கேள்விக்கும் இயக்குனர் அஜய் ஞானமுத்து விளக்கம் அளித்திருக்கிறார். டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர் அஜய் ஞானமுத்து. இவர் இயக்கத்தில் சீயான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த படம் தான் கோப்ரா. இந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், ஸ்ரீநிதி செட்டி மிருனாளினி ரவி, மீனாட்சி போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த படம் மகான். இது ஓடிடியில் வெளியாகியிருந்தது. எனவே கோப்ரா படம் திரையரங்கில் வெளியானதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. விநாயகர் சதுர்த்தி அன்று ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

3 மணி நேரம் நீளம் ஏன்? உங்க லக்கி நம்பரா? கேள்விகளால் துளைத்து எடுத்த நெட்டிசன்கள் 1

விளம்பரம்

படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் நெகட்டிவ் விமர்சனங்களையே கொடுத்தனர். படத்தின் நீளம் மிக சுமையாக இருப்பதாக கூறினர். எனவே அடுத்த நாளே படத்தின் நீளத்தை 20 நிமிடம் குறைத்து இருந்தது படக்குழு. தற்போது ரசிகர்கள் பலர் அஜய் ஞானமுத்துவிடம் பல கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர் இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார். முதல் கேள்வியாக மூன்று மணி நேரம் 3 நிமிடங்களில் மூன்று வினாடிகள் ஏன் படத்தின் நேரத்தை தேர்வு செய்தீர்கள்? இதுதான் முதல் நாள் நெகட்டிவ் விமர்சனங்கள் வருவதற்கு காரணமாக இருந்தது என்று ஒருவர் கேட்க, மூன்று என்னுடைய லக்கி நம்பர் கிடையாது. 3+3+3=9, 3*3*3=27 அதுவும் என்னுடைய லக்கி நம்பர் இல்லை என்று பதிலளித்து இருந்தார். மேலும் நேரத்தை குறைப்பதால் சில டீடைல் மிஸ் ஆகிவிடும் என்று தான் நினைத்ததாகவும், ஆனால் பலர் 3 மணி நேர படத்தை விரும்பியதாகவும், இனிவரும் படங்களில் நேரத்தை கருத்தில் கொள்வேன் என்றும் பதிலளித்திருந்தார்.

தொடர்புடையவை  பிக் பாஸ் வின்னர் டைட்டில் எல்லாம் செல்லாது! முகென் ராவுக்கு இனிமேல் தான் சோதனையே!!

3 மணி நேரம் நீளம் ஏன்? உங்க லக்கி நம்பரா? கேள்விகளால் துளைத்து எடுத்த நெட்டிசன்கள் 3

விளம்பரம்

அடுத்த கேள்வியாக மிகவும் குழப்பமான ஸ்கிரீன் பிளே இருந்ததாக ஒருவர் கேள்வி கேட்க, முதலில் அதற்கு மன்னிப்பு கோருவதாகவும், நான் ஒரு பார்வையாளராக இருந்து யோசித்து இந்த படத்தை எடுத்திருக்கிறேன், நீங்கள் நேரமிருந்தால் மீண்டும் ஒருமுறை இந்த படத்தை பார்க்கவும். நிச்சயமாக நீங்கள் இதை விரும்புவீர்கள் என்று பதில் அளித்திருக்கிறார். மேலும் இரண்டாம் பாகம் எடுப்பீர்களா என்று கேட்டதற்கு இல்லை இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை, இந்த படத்தை ஒரே படமாக எடுக்க வேண்டும் என்று தான் எண்ணி இருந்தேன் என்று கூறியிருந்தார்.

3 மணி நேரம் நீளம் ஏன்? உங்க லக்கி நம்பரா? கேள்விகளால் துளைத்து எடுத்த நெட்டிசன்கள் 5

விளம்பரம்

மற்றும் ஒருவர் நல்ல படம் ஆனால் ஸ்கிரீன் ப்ளேவும் கிளைமாக்ஸ்சும் ஏமாற்றம் செய்து விட்டது என்று கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்த அவர் ஹீரோவை நாட்டிலிருந்து தப்பி சென்று வெளிநாடுகளில் ஒரு மாஸ் மியூசிக் உடன் அலைய விடுவது போல் எங்களால் காட்டி இருக்க முடியும், ஆனால் அது நியாயமாக இருக்காது எனவே தான் கிளைமாக்ஸ் காட்சியை இப்படி வைத்திருக்கிறோம் என்று பதில் அளித்திருந்தார்.

தொடர்புடையவை  ராஜமௌலியால் யோசனையில் மணிரத்னம்!!!மீண்டும் படமாக்க படும் பொன்னியின் செல்வன்.

3 மணி நேரம் நீளம் ஏன்? உங்க லக்கி நம்பரா? கேள்விகளால் துளைத்து எடுத்த நெட்டிசன்கள் 7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment