என்னை என்ன சொல்லி இருந்தாலும் தாங்கி இருப்பேன்..ஆனா, ஸ்ரீநிதி பற்றி மனம் திறந்து பேசிய நக்ஷத்ரா

தற்போது ஸ்ரீநிதி குறித்து அவரது தோழி நட்சத்திரா தனது கணவருடன் சேர்ந்து முதல் முறையாக பேட்டி அளித்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் நடித்து பிரபலமானவர் நட்சத்திரா. கேரளாவைச் சேர்ந்த இவர் கிடா பூசாரி மகுடி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். பின்னர் படங்களில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் போகவே சின்னத்திரை பக்கம் தலைகாட்டத் தொடங்கினார். ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற நாடகத்தில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். சினிமாவில் கிடைக்காத பேரும் புகழும் சின்னத்திரையில் அவருக்கு கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். யதார்த்தமான நடிப்பும், முக பாவனைகளும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. யாரடி நீ மோகினி சீரியல் முடிவடைந்த நிலையில் வள்ளி திருமணம் என்ற தொடரில் நடித்து வருகிறார் நட்சத்திரா.

என்னை என்ன சொல்லி இருந்தாலும் தாங்கி இருப்பேன்..ஆனா, ஸ்ரீநிதி பற்றி மனம் திறந்து பேசிய நக்ஷத்ரா 1

விளம்பரம்

இந்த நிலையில் நட்சத்திரா குறித்து அவரது நண்பரும் உடன் நடித்தவருமான ஸ்ரீநிதி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், நட்சத்திரா ஒரு பையனை காதலிக்கிறார், ஒரு மாதத்திலேயே நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது. ஆனால் எங்களுக்கு அது தெரியாது, நட்சத்திராவின் வாழ்க்கைய காப்பாத்த முடியல, என் நம்பரை பிளாக் பண்ண வச்சிட்டாங்க..நட்சத்திராவின் சம்பளம் 2.5 லட்சம் ஆனா அவ கணக்கில் 10 ஆயிரம் கூட இல்லை, இதெல்லாம் கேட்டதற்கு என்னை அடிக்கிறாங்க, திட்றாங்க, சித்து நிலைமை நட்சத்திராவுக்கு நடந்துடும்ன்னு பயமா இருக்கு என்றெல்லாம் தனது நெருங்கிய தோழி நட்சத்திரா பற்றி ஸ்ரீநிதி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதை மறுத்து நட்சத்திரா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் என்னை யாரும் அடைத்து வைக்கவில்லை, ஸ்ரீநிதி மன அழுத்ததில் அவ்வாறு பேசுவதாக கூறியிருந்தார்.

தொடர்புடையவை  ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படும் போட்டியாளர் கானா சேட்டு.! நடுவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்..!

என்னை என்ன சொல்லி இருந்தாலும் தாங்கி இருப்பேன்..ஆனா, ஸ்ரீநிதி பற்றி மனம் திறந்து பேசிய நக்ஷத்ரா 3

விளம்பரம்

தற்போது ஸ்ரீநிதி குறித்து அவரது தோழி நட்சத்திரா தனது கணவருடன் சேர்ந்து முதல் முறையாக பேட்டி அளித்துள்ளார். ஸ்ரீநிதி தான் தனக்கு கணவரின் போன் நம்பரை கொடுத்தார். அதனால் தான் இவரை காதலிக்க நேர்ந்தது என்று நட்சத்திரா கூறினார். ஒரு நாள் நன்றாக பேசும் ஸ்ரீநிதி இன்னொரு நாள் இப்படி ஆகி விடுகிறார் என்று நட்சத்திரா பேசினார். 3 வருடங்கள் ஒன்றாக ஸ்ரீநிதியுடன் இருந்து விட்டு இப்போது பிறந்த காரணத்தினால் அவர் இப்படி பேசுகிறார் என்று நட்சத்திரா பேசினார். மேலும் தனது கணவர் மற்றும் அவர்கள் குடும்பம் குறித்து பேசியது வருத்தமாக இருந்ததாக கூறினார். அவரின் பேட்டியை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: IndiaGlitz

விளம்பரம்

Leave a Comment