“அது கொஞ்சம் செட்டாகல”!!”True love’அ என்னனு தெரியல..ஆனா நானும் ஆண்ட்ரியாவும் காதலிச்சோம்” ஆண்ட்ரியா பற்றி பேசிய அனிருத்!

வெளியிட்டது

3 என்ற படத்தில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அனிருத். முக்கியமாக அனிருத் இசையமைத்து தனுஷ் பாடிய “கொலவெறி டி” பாடல் உலகளவில் பெரிய வெற்றியை பெற்றது. தனுஷால் அறிமுகம் செய்யப்பட்ட இவர் தொடர்ந்து தனுஷின் தயாரிப்பில் வெளியான சிவா கார்த்திகேயன் படங்களான “எதிர் நீச்சல், மான் கராத்தே” போன்ற படங்களுக்கு இசைமயக்க நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசைமைப்பாளராக மாறிப்போனார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"அது கொஞ்சம் செட்டாகல"!!"True love'அ என்னனு தெரியல..ஆனா நானும் ஆண்ட்ரியாவும் காதலிச்சோம்" ஆண்ட்ரியா பற்றி பேசிய அனிருத்! 1

“வேலையில்லா பட்டதாரி,கத்தி,வேதாளம்,காக்கி சட்டை,பேட்ட,தர்பார்,மாஸ்டர்” என தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார். மேலும் பல இசை அமைப்பாளர்களுக்கு பாடல்கள் பாடியும் கொடுத்துளளார். நடுவில் தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்தார்.

இப்பொது வரும் பெரிய நடிகர் படங்களில் இவர் தான் இசை என ரசிகர்களே கேட்கும் அளவிற்கு உச்சம் தொட்டுள்ளார். வரவிருக்கும் விக்ரம் படத்திற்கும் இவர் தான் இசை. அண்மையில் இவர் இசையில் பீஸ்ட்,கத்துவாக்குல ரெண்டு காதல், டான் போன்ற படங்களுக்கு இசையால் ரசிகர்களை ஆட்கொண்டார்.

அடுத்த வரவிருக்கும் ரஜினியின் “ஜெயிலர்”, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு இசையமையாக்க இவருக்கு பெரிய தொகை பேசப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இப்பொது இவர் அடுத்த பறிமாற்றத்திற்கு ரெடி ஆகி வருகிறார். இந்நிலையில் இவர் பேசிய பழைய வீடியோ ஒன்று இப்பொது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சில ஆண்டுகள் முன்பு தமிழ் திரையுலகில் சர்ச்சைகளை கிளப்பிய “suchi leaks” சம்பவத்தின் போது வெளியான முக்கியமான வெளியீடு நடிகை, பாடகி ஆண்ட்ரியாவும், இசையமைப்பாளர் அனிருத்தின் அந்தரங்க புகைப்படமே. அப்போது தான் இருவரும் காதலித்து வருவதாக வெளியில் அரசல் புரசலாக பேசப்பட்டது. ஆனால் இருவருமே அதை ஒப்புக்கொள்ளவோ, மீடியாவில் தெரிவிக்கவோ இல்லை. கொஞ்ச காலம் மட்டுமே இருவரும் காதலிக்க திடீரென பிரிந்துவிட்டார்கள்.

அந்த தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய அனிருத். “எனக்கு ஆண்ட்ரியாவுக்கும் காதல் இருந்தது உண்மையே…அது true love’அ இல்லையா என்பதெல்லாம் எனக்கு தெரியவில்லை எனக்கு அப்போது வயது வெறும் 19 தான், ஆண்ட்ரியாவிற்கு 25 அதனாலேயே என்னமோ கூட எங்களுக்குள் செட் ஆகாமல் போனது” என வெளிப்படையாகவே அந்த வீடியோவில் பேசியுள்ளார் அனிருத்.நீங்களும் அந்த விடியோவை காண….

Video Courtesy – thanthitv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்