தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமாகி இன்று தனக்கான மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்து உள்ளார். தற்போது கதையின் நாயகியாக நடிப்பதை விட்டுவிட்டு நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் அவர் நடிக்கும் படங்கள் அவருக்கு தொடர்ந்து வெற்றியை பெற்றுக்கொடுத்து வருகிறது.

தற்போது நயன்தாரா டெஸ்ட் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில் ஜவான் படத்தில் நடித்து ஹிந்தியிலும் கால் தடம் பதித்து இருக்கிறார் நயன்தாரா. தொடர்ந்து படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்து வரும் நயன்தாரா தனது கணவர் விக்கி மற்றும் குழந்தைகளுடனும் அடிக்கடி நேரத்தை செலவிட்டு வருகிறார். தற்போது இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது குடும்பத்துடன் வீட்டில் கொண்டாடி உள்ளார்.

தனது மகன்களுடன் பூஜை நடத்தி விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் நயன்தாரா. இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram