தமிழகத்தின் முண்ணனி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தான் அனிருத். குத்து பாடல்கள் என்றாலும் சரி, மெல்லிசை மெலடி பாடல்கள் என்றாலும் சரி ஒரு கை பார்த்துவிடுவார் அனிருத். இசையைப்பது மட்டுமில்லாமல் பாடுவது, பாடல் எழுதுவது, நடனம் ஆடுவது என்று பல இளைஞர்களை கவர்ந்து உள்ளார். தன்னைத் தானே ராக் ஸ்டார் என்று அடைமொழி வேறு போட்டுக் கொண்டார் அனிருத். இவரது இசைக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அனிருத் மீது இரண்டு விமர்சனங்கள் இருந்து கொண்டே இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்று தமிழ் பாடல்களில் ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பிற மொழிகளை அதிக அளவில் புகுத்தி தமிழப் பாடல்களை கொலை செய்து விடுகிறார் என்பது. இன்னொரு குற்றச்சாட்டு காப்பியடிப்பது. சுயமாக பாடல் இசையமைக்கத் தெரியாமல் ஏதாவது பழங்கால ஆங்கிலப் படங்கள், ஹிந்தி படங்களில் இருந்து சுடுகிறார் என்பது தான். ஏற்கனவே அரபிக்குத்து பாடல் ஹிந்தி படத்தில் இருந்து சுடப்பட்டது என்று வீடியோ ஆதாரங்களை போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளிவிட்டனர்.
தற்போது கமல் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள திரைப்படம் தான் விக்ரம். இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து இருந்தார். இதில் வரும் தற்போது இந்த பாட்டின் இசையையும், BGMஐயும் அனிருத் காபி அடித்துள்ளார். இந்த படத்தின் bgm ஐ The Fault in Our Stars என்ற ஆங்கில படத்தில் வரும் ஒரு இசையை அப்படியே காப்பியடித்து போட்டுள்ளார் அனிருத். அந்த படத்தின் 1:31:38வது நிமிடத்தில் வரும் ஒரு இசையை அப்படியே காபி அடித்துள்ளார் அனிருத். இதை ஆதாரத்துடன் போட்டு நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். எந்தப்படத்தில் இருந்து சுட்டு இருக்கார்ன்னு கீழே உள்ள வீடியோவை நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க.. 100% சிரிப்பு நிச்சயம்..Watch the below video..
Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7