Categories: சினிமா

அரண்மனை போன்ற வீட்டை கட்டி முடித்துள்ள நடிகர் விஜயகுமார் மகள்.! Home Tour வீடியோ இதோ.!

வெளியிட்டது

நடிகர் விஜயகுமாரின் மூத்த மனைவி முத்துக் கண்ணுவின் மகளாக இருக்கும் அனிதா விஜயகுமார் சென்னையில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டியிருக்கிறார் அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் இன்று நடந்துள்ளது. அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார் அனிதா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அரண்மனை போன்ற வீட்டை கட்டி முடித்துள்ள நடிகர் விஜயகுமார் மகள்.! Home Tour வீடியோ இதோ.! 1

இந்த வீடியோவை பார்த்த பலரும் இது வீடா? இல்லை அரண்மனையா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் மிக பிரம்மாண்டமான கலை அம்சத்துடன் வீட்டை கட்டி முடித்திருக்கிறார் அனிதா.


தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகள். இதில் விஜயகுமாருக்கு முதலில் முத்துக்கண்ணு என்பவருடன் திருமணம் ஆகி கவிதா, அனிதா, அருண் விஜய் என்று மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.


பின்னர் இரண்டாவதாக மஞ்சுளாவை 1976 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட விஜயகுமாருக்கு வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா என்கிற மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.

மஞ்சுளா மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் தற்போது தனது மூத்த மனைவியின் குடும்பம் மற்றும் மகள்களுடன் வசித்து வருகிறார் விஜயகுமார்.

சில படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா போன்றோர்கள் திரைத்துறையை விட்டு விலகிய நிலையில் விஜயகுமார் மற்றும் அருண் விஜய் ஆகிய இருவர் மட்டுமே படங்களில் நடித்து வருகின்றனர்.


வீட்டில் ஏதாவது விசேஷம், குடும்ப நிகழ்வுகள் என்றால் ஒன்றாக இணைந்து அதை கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் விஜயகுமார் குடும்பத்தினர்.


குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பலருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் மூத்த மனைவியின் மகளாக இருக்கும் அனிதா விஜயகுமார் தனது புதுமனை புகுவிழாவை நடத்தி இருக்கிறார்.


அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. மிகப்பிரமாண்டமாக தனது கனவு இல்லத்தை கட்டி முடித்திருக்கிறார் அனிதா விஜயகுமார்.


மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அந்த வீட்டில் தியேட்டர், உட்பட பல வசதிகள் இருக்கிறது. மிகப்பெரிய படுக்கை அறைகள், வசதியுடன் கூடிய பாத்ரூம், தியேட்டர்கள் என்று பார்த்து பார்த்து அந்த வீட்டை கட்டி முடித்துள்ளார் அனிதா விஜயகுமார்.


இந்த விழாவில் அனிதாவின் சகோதரிகளான கவிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி, தம்பி அருண் விஜய், அருண் விஜயின் மனைவி, பிள்ளைகள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். விழாவை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்துள்ளார் விஜயகுமார்.


இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்