தனது தந்தை மற்றும் சகோதரியுடன் தீபாவளியை கொண்டாடி இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் சினேகா.

அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா.

இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விகான் என்ற மகனும் ஆதித்ந்யா என்ற மகளும் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சினேகாவும், பிரசன்னாவும் அப்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் உடல் எடை அதிகமாக இருந்த சினேகா தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

அந்த உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் அவர் அவ்வபோது தனது instagram பக்கத்தில் பதிவேற்றி பலருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்து வருகிறார்.

சமீபத்தில் கூட தனது வீட்டில் வரலக்ஷ்மி விரதம் மற்றும் நவராத்திரியை வெகு விமர்சையாக கொண்டாடி இருந்தார்.

அனைத்து விழாக்களுக்கும் தனது தோழிகளை அழைத்து அதை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தனது தந்தை மற்றும் சகோதரியுடன் தீபாவளியை கொண்டாடி இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் சினேகா. அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. கணவர், குழந்தைகளுடன் தந்தை வீட்டுக்கு சென்ற அவர் அப்பா, அக்கா மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது பகிர்ந்து உள்ளார்.