மன்சூர் அலிகான் பிக்பாஸ் உள்ளே செல்வது குறித்து தற்போது ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து விலகிய நிலையில் மன்சூர் அலிகான் உள்ளே செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அவரே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஒன்பதாம் தேதி முதல் தொடங்கி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன் 6. எப்போதும் இல்லாத அளவிற்கு தொலைக்காட்சியில் ஒரு மணி நேரமும், டிஸ்னி ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரம் லைவ்வாக பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் எப்போதும் 16 முதல் 18 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த முறை அதிகபட்சமாக 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.!

அதில் ஜி.பி. முத்து தனக்கு மன அழுத்தம் இருப்பதாக கூறி தானாக முன்வந்து வெளியேறி விட்டார். எனவே அந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று பலரும் எண்ணி வந்த நிலையில், முதல் எலிமினேஷனாக யாரும் எதிர்பாராத விதமாக நடன இயக்குனர் சாந்தி வெளியேற்றப்பட்டுள்ளார். ஜிபி முத்துவுக்காக பலரும் பிக்பாஸ்ஸை பார்க்க தொடங்கி இருந்தனர். ஆனால் தனக்கு காசு பணம் புகழ் கிடைப்பதை விட தன் பிள்ளைகள் தான் முக்கியம் அவர்களுடன் ஒரு நாள் படுத்து தூங்கினாலே எனக்கு சந்தோசம் என வீட்டை விட்டு வெளியேறினார் ஜிபி முத்து. இது கமல் உட்பட பார்க்கும் பலரையும் நெகிழ வைத்தது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஜிபி முத்துவிற்கு பதிலாக மன்சூர் அலிகானை உள்ளே அனுப்ப உள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து மன்சூர் அலிகானிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறும் போது, பிக்பாஸ்ஸில் தன்னை கூப்பிட்டார்கள், அங்கு சென்றால் பாட்டு போட்டால் ஆட வேண்டுமாம், பாட வேண்டுமாம், ஆனால் நான் கேட்ட பணத்தை அவர்கள் கொடுக்க மறுத்துவிட்டார்கள். அதனால் நான் உள்ளே செல்லவில்லை என்று கலாய்க்கும் விதமாக கூறினார். மேலும் மக்களுக்கு ஏற்கனவே பக்கத்துக்கு வீட்டில் சண்டை நடந்தால் கூட எட்டி பார்க்கும் பழக்கம் இருப்பதால் இந்த ஷோவை ரசிக்கிறார்கள் என்று கூறினார்.
#MansaorAlikhan About #BiggBoss pic.twitter.com/yi8fP3Uldf
— chettyrajubhai (@chettyrajubhai) October 27, 2022