குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சீசன் 1, 2, 3 லிருந்து 3 குக்குகள் தற்போது இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றனர். சீசன் ஒன்றிலிருந்து ரேகாவும், சீசன் இரண்டிலிருந்து ஷகிலாவும், சீசன் மூன்றில் இருந்து ரோஷிணி ஹரிப்பிரியனும் தற்போது வருகை தந்திருக்கின்றனர். இதை வைத்து இந்த வாரம் ஒரு புது டாஸ்க் ஒன்றை கொடுத்திருக்கின்றனர் நடுவர்கள். ரியாலிட்டி ஷோக்களில் முதன்மை இடம் வகிப்பதும் பல லட்சம் பார்வையாளர்களைக் கொண்டுள்ள நிகழ்ச்சியுமாக இருக்கின்றது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு உண்மையான காரணம் என்று சொன்னால் அது கோமாளிகளுடன் இணைந்து குக்குகளும் அடிக்கும் லூட்டிகள் தான். சுட்டித்தனங்கள் நிறைந்த ஒருவரை உதவியாளராக கொண்டு நடுவர்கள் கொடுக்கும் தொல்லைகளையும் மீறி குக்குகள எவ்வாறு சமைக்கிறார்கள் என்பதை பற்றிய ஒரு நிகழ்ச்சி தான் இந்த ரியாலிட்டி ஷோவின் வெற்றிக்கு காரணம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் மூன்று சீசன்களை முடித்துள்ள இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த சீசனில் கோமாளிகளாக குரேஷி, புகழ், சுனிதா ஆகியோருடன் சேர்த்து ரவீனா, மோனிஷா, தங்கதுரை, சிங்கப்பூர் தீபன், ஜி பி முத்து, சில்மிஷம் சிவா என புதியவர்கள் பலர் களமிறங்கி இருக்கின்றனர். மணிமேகலை சில நாட்கள் மட்டுமே கோமாளியாக வந்த நிலையில் அவர் திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார். பழைய கோமாளியாக இருந்த சிவாங்கி தற்போது குக்காக மாறி கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர்களுடன் இணைந்து கிஷோர், ராஜ் ஐயப்பன், விஜே விஷால், மதுரை காளையன், மைம் கோபி, விசித்ரா, ஷெரின், ஸ்ருஷ்டி, ஆண்ட்ரியன் உள்ளிட்ட 10 பேர் குக்குகளாக கலக்கி வருகின்றனர். இதில் கிஷோர், ராஜ் ஐயப்பன், மதுரை காளையன், விஜே விஷால் ஆகிய நான்கு பேர் இதுவரை எலிமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் மீதம் 6 குக்குகள் சமைத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் இம்யூனிட்டி வாரம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக பழைய சீசன்களில் இருந்து மூன்று குக்குகள் வருகை தந்துள்ளனர்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தற்போது இருக்கும் குக்குகள் ஆறு பேருடன் இணைந்து ரேகா, ஷகிலா மற்றும் ரோஷினி ஆகிய மூவரும் சமைக்கப் போகிறார்கள். இவர்கள் மூவரும் அட்வான்டேஜ் குக்கிங் தொடங்கி, இம்யூனிட்டி குக்கிங் வரை சீசன் 4 போட்டியாளர்களுடன் இணைந்து சமைப்பார்கள். இவர்கள் மூவரும் இம்யூனிட்டியை வென்று விட்டால் தற்போது சீசன் 4-ன் குக்குகள் ஆறு பேரும் அடுத்த எலிமினேஷன் ரவுண்டுக்கு தகுதி ஆகி விடுவார்கள் என்று நடுவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இதனால் அனைவரும் பயத்தில் உறைந்து போய் நிற்கின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television