சீரியல் ப்ரோமோவுக்காக 3 நாட்கள் விரதம் இருந்து அலகு காவடி தூக்கிய மிர்ச்சி செந்தில்.! இதோ வீடியோ.!

வெளியிட்டது

ஜீ தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் அண்ணா என்கிற சீரியலுக்காக மிர்ச்சி செந்தில் தற்போது கஷ்டப்பட்டு விரதம் இருந்து அலகு காவடி சுமந்து இருக்கும் வீடியோவை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ரேடியோ மிர்ச்சி என்கிற வானொலியில் ஆர்.ஜேவாக வேலை பார்த்து வந்தவர் செந்தில். இவருக்கு மதுர என்கிற நாடகத்தின் மூலமாக சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நாடகத்தில் கிராமத்து இளைஞராக தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதால் இவருக்கு அடுத்தடுத்த நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சரவணன் மீனாட்சி தொடரின் பாகம் ஒன்றில் சரவணனாக இவர் நடித்தார். இந்த நாடகத்தில் தன்னுடன் நடித்த ஸ்ரீஜா உடன் இவருக்கு காதல் மலர்ந்தது. ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, ஸ்ரீஜா உடன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருந்தார். திருமணம் ஆகி 8 ஆண்டுகள் கழித்து தற்போது ஆண் குழந்தைக்கு பெற்றோர்கள் ஆகியிருக்கின்றனர் செந்திலும் ஸ்ரீஜா தம்பதியினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சீரியல் ப்ரோமோவுக்காக 3 நாட்கள் விரதம் இருந்து அலகு காவடி தூக்கிய மிர்ச்சி செந்தில்.! இதோ வீடியோ.! 1

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற சீரியலில் மாயன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் செந்தில். பின்னர் அவருக்கு எந்த சீரியலும் சரியாக அமையவில்லை. தற்போது விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகி இருக்கும் செந்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்று இருக்கிறார். அண்ணா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சீரியலின் ப்ரோமோக்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. மூன்று தங்கைகளுக்கு அண்ணனாக இருக்கும் செந்தில் தனது தங்கைகளை எப்படி பாதுகாப்பாக வளர்க்கிறார் என்கிற ரீதியில் அந்த ப்ரோமோ வெளியாகி இருந்தது. இதில் பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் தந்தையாக நடித்த வருபவர் தான் இந்த சீரியலிலும் செந்திலுக்கு தந்தையாக நடிக்க இருக்கிறார். மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா செந்திலுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்த இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ப்ரோமோக்களில் அவரை காணவில்லை அவர் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்று தெரிகிறது.


இந்த நிலையில் தற்போது தனது youtube பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் செந்தில். அதில் ப்ரோமோவுக்காக 18 கிலோ எடையுள்ள அலகு காவடியை சுமந்து கொண்டு அவர் நடந்து வருவது போன்ற வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இவர் கன்னத்தில் அலகு குத்த வில்லை அதற்கு பதிலாக அலகு குத்தியது போல் தோற்றத்தை மட்டுமே காண்பித்தார். மேலும் வயிற்றில் ஒரு கச்சை ஒன்றை கட்டி அதன் மீது பல வேல் போன்ற பொருட்களை வைத்து, மூன்று நாட்கள் விரதம் இருந்து இந்த ப்ரோமோவை எடுத்ததாக வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் செந்தில். அந்த வீடியோ எடுக்கப்பட்டபோது பலருக்கும் அருள் வந்து ஆடியதாகவும் அவர் கூறியிருக்கிறார். அந்த முழு வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Senthil Sreeja Official

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்