Categories: சினிமா

புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த டிக்கெட்கள்..! 650 தியேட்டர்கள் ஹவுஸ் புஃல்..!

வெளியிட்டது

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அண்ணாச்சி ‘சரவணன் அருள்’ நடித்துள்ள படம் தான் ‘தி லெஜன்ட்’ இந்த படம் நாளை உலகமெங்கும் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை ஜேடி ஜெரி என இருவர் இயக்கி உள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர், ட்ரைலர் என வெளியாகி அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வாடிவாசல் பாடல் மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட பாடலாக இருக்கிறது. ட்ரெய்லர் வெளியாகி சுமார் 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த டிக்கெட்கள்..! 650 தியேட்டர்கள் ஹவுஸ் புஃல்..! 1

தங்கள் கடையில் விளம்பரங்களில் நடித்து வந்த சரவணன் அருளுக்கு திடீரென படத்தில் நடிக்கும் ஆசை வந்தது, சரவணா ஸ்டோர்ஸ் புரடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி, அவரே அதில் நடித்த தொடங்கினார். தி லெஜெண்ட் படத்தில் அவர் அறிவியல் விஞ்ஞானியாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ஊர்வசி ரவுத்தோலா நடித்துள்ளார். பிரம்மண்டமாக உருவாகி உள்ள இந்த படத்தில் நாசர், சுமன், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மறைந்த சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் நடித்த கடைசி படம் இதுவாகும். உலகமெங்கும் 2500 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகிறது. தமிழகத்தில் மட்டும் 800 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

நேற்று முன் தினம் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே 650 தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல் ஆகி உள்ளது. அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட் விற்பனை சில மணி நேரங்களிலேயே தீர்ந்துள்ளது. சில தியேட்டர்களில் காலை நான்கு மணி அல்லது 5 மணி ஷோக்கள் கூட திரையிடப்பட உள்ளன. அதிக திரையரங்குகளில் வெளியாகும் அறிமுக நடிகரின் படம் இதுவே ஆகும். இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படம் 2 மணி நேரம் 41 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக இருக்கிறது. மும்பை, துபாய், கொச்சி, ஹைதராபாத், பெங்களூர் தமிழ்நாடு என ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. அனைத்து ஊர்களுக்கும் சென்று படத்தை பிரமோஷன் செய்யும் வேலைகளில் ஈடுபட்டிருந்தார் லெஜண்ட் சரவணன் இதனால் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்