என்ன இனிமே தமிழ் நடிகர், தென்னிந்திய நடிகர்ன்னு சொல்லாதீங்க..இப்படி சொல்லுங்க..! தனுஷ் பேச்சால் சர்ச்சை

தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் இவரது உருவத்தைக் கண்டு பலரும் உருவக்கேலி செய்தனர். ஆனால் தனது அயராது உழைப்பால் நடிக்கும் திறமையால் பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் கொடிகட்டி பறந்து வருகிறார். அவர் ஹாலிவுட்டில் நடித்த திரைப்படமான “தி கிரே மேன்” திரைப்படம் நெட்பிளிக்ஸ்ல் ஓடிடி தளத்தில் வெளியானது. கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் போன்ற படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்கியிருந்தனர். பல முன்னணி நடிகர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார்.

என்ன இனிமே தமிழ் நடிகர், தென்னிந்திய நடிகர்ன்னு சொல்லாதீங்க..இப்படி சொல்லுங்க..! தனுஷ் பேச்சால் சர்ச்சை 1

விளம்பரம்

இந்த படம் ஹாலிவுட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தில் தனுஷ் நடித்திருப்பது தமிழ் நடிகர் அடுத்த கட்ட சாதனையாகவே பார்க்கப்பட்டது. தற்போது தமிழில் திருச்சிற்றம்பலம், வாத்தி போன்ற படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். நாளை இவரது 39 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது, இதை ஒட்டி இவர் நடிக்கும் வாத்தி படத்தின் டீசர் நாளை வெளியாக இருக்கிறது.

தொடர்புடையவை  அம்மா, பாட்டியுடன் பூர்வீக கிராமத்தில் முன்னோர்கள் வாழ்ந்த வீட்டிற்கு விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்.!

என்ன இனிமே தமிழ் நடிகர், தென்னிந்திய நடிகர்ன்னு சொல்லாதீங்க..இப்படி சொல்லுங்க..! தனுஷ் பேச்சால் சர்ச்சை 3

விளம்பரம்

இந்த நிலையில் தனுஷ் பேசி இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் என்னை இனிமேல் தமிழ் நடிகர், தென்னிந்திய நடிகர் என்றெல்லாம் சொல்ல வேண்டாம்.  இந்திய நடிகர் என்று அழைத்தால் போதுமானது என்று அவர் கூறியிருக்கிறார். இந்த கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்து விட்டதால் தனுஷுக்கு தலைக்கனம் வந்து விட்டதே  என ரசிகர்கள் பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment