Categories: சினிமா

உடல் எடையை வெகுவாக குறைத்து 18 வயது இளைஞர் போல மாறிய அண்ணாச்சி.!

வெளியிட்டது

தனது அடுத்த படத்துக்காக உடல் எடையை குறைத்து 18 வயது இளைஞர் போல் மாறியிருக்கார் அண்ணாச்சி. அந்த புகைப்படம் தற்போது தீயாக பரவி வருகிறது. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் சரவணன் சமீபத்தில் தி லெஜன்ட் என்கிற படத்தில் நடித்தார். ஆரம்பத்தில் தனது கடை விளம்பரங்களில் நடித்து வந்த அவர் பின்னாளில் படத்தில் நடிக்கும் ஆசை வந்தது. எனவே தனது கடை விளம்பரங்களை இயக்கி வந்த இரு இயக்குனர்களை வைத்து தி லெஜெண்ட் என்கிற படத்தை எடுத்தார். இந்த படத்தில் ஊர்வசி ரவுத்தேலா, மறைந்த காமெடி நடிகர் விவேக், பிரபு, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

உடல் எடையை வெகுவாக குறைத்து 18 வயது இளைஞர் போல மாறிய அண்ணாச்சி.! 1

வித்தியாசமான கதையம்சத்துடன் கூடிய இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றிருந்தது. மேலும் போட்டிக்கு எந்த படமும் இல்லாததால் படம் வசூலையும் குவித்திருந்தது. ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், பின்னர் குடும்பம் குடும்பமாக சரவணன் படத்தை ரசித்து பார்த்தனர். இதனால் ஏகத்துக்கும் குஷியில் இருந்தார் அருள் சரவணன். தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்காக கதைகளை கேட்டு வருகிறார். விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ட்விட்டரில் கணக்கு ஒன்றை தொடங்கிய அவர், ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வபோது ஏதாவது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் இளைய தளபதி போல ஹேர்ஸ்டைலை மாற்றி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். தற்போது மீண்டும் 18 வயது இளைஞர் போல உடல் தோற்றத்தை மாற்றி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வெந்து தணிந்தது காடு படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து 18 வயது பையனாக மாறி இருப்பார். அதே போல அண்ணாச்சியும் போட்டியாக மாறி விட்டார் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்