வெந்து தணிந்தது காடு படத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் தான் வெந்து தணிந்தது காடு இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகிய வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது சிம்பு இந்த படத்தில் முத்து என்கிற கேரக்டரில் மிக இயல்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஒரு கிராமத்தில் இருந்து வரும் இளைஞன் சூழ்நிலை காரணமாக எவ்வாறு கேங்ஸ்டர் ஆக மாறுகிறான் என்பது குறித்த படம்தான் வெந்து தணிந்தது காடு. படம் வெளியாகி ஒரு வாரத்திலேயே வசூலை குவித்து வருகிறது. மேக்கிங் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், சித்தி இத்னானி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்து இருந்தார். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். பிண்ணனி பாடல்கள் அனைத்தும் மக்களை வெகுவாக கவர்ந்து இருந்தன. குறிப்பாக மல்லிப்பூ பாடல் அனைவரின் விருப்பமாக இருந்தது. இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது பாகத்திற்கான பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் சண்டைக்காட்சிகள், பாடல்கள், எடிட்டிங் உள்ளிட்ட அனைத்தையும் தொழில்நுட்ப கலைஞர்கள. விவரித்துள்ளனர். முதல் பாகத்தில் சண்டைக்காட்சிகள் அதிகம் இல்லை என்று ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். இதனால் இரண்டாம் பாகத்தில் அதிக சண்டை காட்சிகள் வேண்டும் என்று சிம்பு கௌதமிடம் மேடையில் கோரிக்கை வைத்து இருந்தார். எனவே இரண்டாம் பாகத்தில் அதிக சண்டைக் காட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேக்கிங் வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Vels Film International