திருமணம் ஆகி முதல் முறையாக கணவருடன் வெளிநாடு சென்றுள்ள அனிதா சம்பத்.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அனிதா சம்பத். இவர் தனது உடையை நேர்த்தியாக அணிந்து இருப்பதால் இவருக்கு பல ரசிகர் மற்றும் ரசிகர்கள் கிடைத்தனர். இவர் சேலை அணிந்திருக்கும் விதமும், சேலையின் கலருக்கு மேட்ச்சாக இவர் காதுகளில் தோடுகளும், கழுத்தில் செயினும் போட்டு வருவதை பார்க்கவே பலரும் செய்திகள் பார்க்க தொடங்கியிருந்தனர். இதனால் ஒரே இரவில் மிகப் பிரபலமானார் அனிதா சம்பத். இந்த புகழைக் கொண்டு அவருக்கு பிக் பாஸில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 4ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் எப்பொழுதும் மற்ற போட்டியாளர்கள் மீது சந்தேக பார்வையும் மற்ற போட்டியாளர்கள் மீது விமர்சனத்தையும் வைத்துக் கொண்டிருந்ததால் இவர் மீது அதிருப்தி ஏற்பட்டு பாதியிலேயே மக்கள் இவரை வெளியேற்றினர்.

திருமணம் ஆகி முதல் முறையாக கணவருடன் வெளிநாடு சென்றுள்ள அனிதா சம்பத்.! 1

வெளியே வந்த பிறகு சூர்யா நடித்திருந்த காப்பான் படத்திலும், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் சில காட்சிகளில் நடித்திருந்தார் அனிதா சம்பத், பின்னர் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் என்னும் 24 மணி நேர ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கும் சென்று பங்கெடுத்தார். அங்கும் அவர் தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் மீது சந்தேக பார்வையுடன் விமர்சனங்களை வைத்துக் கொண்டிருந்ததால் மீண்டும் மக்களுக்கு இவர் மீது அதிருப்தி ஏற்பட்டு இவரை வெளியேற்றினர். பின்னர் இங்கிருந்து வெளியேறிய அனிதா தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். மேலும் சொந்த வீடு ஒன்றை கட்டி பல பிரபலங்களையும் அந்த வீட்டிற்கு வரவேற்று இருந்தார். சிறுவயதில் இருந்து ஒரு நல்ல வீட்டில் வாழ்ந்து விட மாட்டோமா என்று ஏங்கி இருந்த தனக்கு ஒரு மாடி வீடு வைத்து சொந்தமாக வீடு கட்டி இருந்ததை நினைத்து அவர் instagram-ல் பெருமையுடன் பதிவிட்டிருந்தார்.

தற்போது திருமணம் ஆகி அவர் முதல்முறையாக வெளிநாடு பயணம் ஒன்றுக்கு சென்றுள்ளார். மலேசியாவிற்கு தனது கணவருடன் சுற்றுலா சென்றுள்ள அவர் தற்போது ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ஒரு வழியாக விசா கிடைத்து மலேசியாவிற்கு வந்துவிட்டோம், எங்களின் முதல் இன்டர்நேஷனல் ட்ரிப். வேறு நாட்டில் ஒன்றாக கால் எடுத்து வைக்கணும் என ஆசைப்பட்டோம். கடைசியில் கல்யாண நாளெல்லாம் முடிந்து விசா அப்ரூவாகி தனித்தனியாக வரவேண்டும் என்று இருக்கிறது. ஆனாலும் நாங்கள் இங்க மலேசிய மண்ணில் மகிழ்ச்சியாக உலவிக் கொண்டிருக்கிறோம். மலேசிய மக்களை மிகவும் பிடித்து இருக்கிறது என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்