நயன்தாரா உடை, முகத்தில் கரி, விஜய் டிவிக்கு எதிராக கொந்தளித்த தமிழ் மக்கள்.!

சமீபத்தில் நயன்தாரா போலவே திருமண உடை அணிந்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நடனமாடிய ஆர்த்திக்கு ஆதரவாகவும், விஜய் டிவிக்கு எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவியில் பிக்பாஸில் கலந்து கொண்டவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதில் ஆர்த்தியும் அவரது கணவரும் பங்கெடுத்துள்ளனர். தன் உடல் எடை அதிகமாக இருந்த போதும் ஆர்த்தி தன்னால் முடிந்த அளவிற்கு நடனமாடி வருகிறார். அவரது கணவரும் தன்னால் முடிந்தவரை ஆர்த்திக்கு உதவியாக நடனமாடி வருகிறார். இவர்கள் இறுதி சுற்று வரை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் போனவாரம் வெளியான எபிசோடில் ஆர்த்தி நயன்தாரா போல் உடை அணிந்து இருந்தார். இதை விக்னேஷ் சிவனே தன்னுடைய ட்விட்டரில் ஷேர் செய்து அழகாக இருக்கிறீர்கள் ஆர்த்தி என்று பதிவிட்டு இருந்தார்.

நயன்தாரா உடை, முகத்தில் கரி, விஜய் டிவிக்கு எதிராக கொந்தளித்த தமிழ் மக்கள்.! 1

விளம்பரம்

 

இந்த நிலையில் ஆர்த்தி நயன்தாரா போல் உடை அணிந்த புகைப்படத்தை பலரும் வரவேற்றனர். இன்ஸ்டாவிலும் அந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்து இருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான போது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் ஆர்த்தி முகத்தில் கரியை பூசி அவர் கருப்பான தோற்றத்தில் இருப்பது போல் காண்பிக்கப்பட்டுள்ளது. இது தற்போது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உருவத்தை வைத்து கேள்வி செய்வதும், அவர்களின் நிறத்தை வைத்து கேலி செய்வதையும் காமெடி என்று நினைத்துக் கொண்டு பலரும் உருவ கேலி செய்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை விஜய் டிவியில் பல காலமாக இருந்து வருகிறது. எடுத்துக்காட்டாக அறந்தாங்கி நிஷா, தீபா போன்றவர்களை உருவக் கேலி செய்தும், நிறத்தை வைத்து கேலி செய்தும் காமெடி என்ற பெயரில் செய்து வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  கயல் சீரியலை விட்டு விலகும் சஞ்சீவ்? இவரும் போறாரா? சஞ்சீவ் வெளியிட்ட வைரல் புகைப்படம்.!

நயன்தாரா உடை, முகத்தில் கரி, விஜய் டிவிக்கு எதிராக கொந்தளித்த தமிழ் மக்கள்.! 3 நயன்தாரா உடை, முகத்தில் கரி, விஜய் டிவிக்கு எதிராக கொந்தளித்த தமிழ் மக்கள்.! 5 நயன்தாரா உடை, முகத்தில் கரி, விஜய் டிவிக்கு எதிராக கொந்தளித்த தமிழ் மக்கள்.! 7

இந்த நிலையில் ஆர்த்தி கணேஷ் ஜோடிகள் நடனமாடும் பொழுது நயன்தாரா உடையை ஆர்த்தி அணிந்திருந்தார். ஆனால் அவரது முகத்தில் கருப்பு நிற சாயம் பூசி இருந்தது. இதை பார்த்த நெட்டிசன்கள் ஏன் நயன்தாரா மட்டும்தான் இந்த உடையை அணிந்து அழகாக தோன்ற வேண்டுமா? ஆர்த்தி அழகாக இருக்கக் கூடாது என்று இப்படி முகத்தில் கறியை பூசி உள்ளீர்களா? என்று கமெண்ட்களில் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டனர். மேலும் ஆர்த்தி எப்பொழுது வரும் பொழுதும் யானை பிளிறும் சத்தத்தையும் போடுவார்கள். இது போல் உருவத்தையும் நிறத்தையும் வைத்து கேலி செய்வதை எப்போதுதான் நிறுத்துவீர்கள் என்று விஜய் டிவிக்கு கமெண்டில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment